Home » ஊத்தங்கரை அதியமான் கல்வியல் கல்லூரியில் உலக நுகர்வோர் தினவிழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

ஊத்தங்கரை அதியமான் கல்வியல் கல்லூரியில் உலக நுகர்வோர் தினவிழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

by Admin
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், அதியமான் கல்வியல் கல்லூரியில்,
உலக நுகர்வோர் தினவிழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

அது சமயம் நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் கருத்தரங்கு துவங்கியது.
பள்ளியின் தாளாளர் மற்றும் நிறுவனருமான திரு.திருமால்முருகன் அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர். முனைவர்.திருமதி.மணிமேகலை அவர்கள் வரவேற்புரை கொடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக சிறப்புரையாற்ற கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நல சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு.கோபிநாத் அவர்கள்.
உலக நுகர்வோர் தினவிழா மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-1986 பற்றிய விதிகள் மற்றும் உலக நுகர்வோர் வரலாற்று செய்திகள், நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் தமிழ்நாடு,பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பின் FEDCOT-CHENNAI இயக்குனர். திரு.ஏஜி. ஜாய் அவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு திருத்த சட்டம் 2019 பற்றியும், அதனுடைய முறையீடு தொகைகள் குறித்தும் குறைதீர் மன்ற ஆணையத்தின் பொறுப்புகள், நடவடிக்கைகள், வழக்குகள், புகார்கள் ,சமரசங்கள் அபராதங்கள் ,தண்டனைகள் போன்றவற்றை விளக்கியதோடு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 அதன் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் விதிகள்- 2011 மேலும் உணவு பாதுகாப்பு விதிகள் மற்றும் நடைமுறை -2017 குறித்த விவரங்களையும் தற்போது மத்திய அரசின் உணவு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் ஆய்வுகள் மேலும் மத்திய அரசின் சுகாதார ஆய்வு பங்களிப்பில் கிடைக்கப்பெற்ற தரவுகளாக, நுண்ணூட்டச் சத்து குறைபாட்டினால், உணவு பற்றாக்குறையாளும், ஒரு நாளைக்கு 4500 குழந்தைகள் இறக்கியது. இது ஏறக்குறைய மாதத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் வரை இறப்பு நேரிடுகிறது எனவும், மேலும் பாதுகாப்பற்ற உணவுகளாகும், தரமில்லாத, சுகாதாரமில்லாத உணவுகளாலும், அரசின் பாதுகாப்பு நிர்ணய அமைப்பின், நிர்ணயம் செய்யப்பட்ட எல்லைகளைத் தாண்டிய நிறமூட்டிகள், சுவையூட்டிகள் ,அழகூட்டின பல தரப்பு புகையிலை, வேதிப்பொருட்களால், புற்றுநோயானது தமிழகத்தில் மட்டும் குறிப்பாக, ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரத்திற்கும் மேலான புற்றுநோய்கள் இருந்து வருவதை சுட்டிக்காட்டியும், மேலும், நுண்ணூட்டச்சத்து குறைபாட்டிற்காக மத்திய அரசின் கீழ் உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பின் போஷன் அபியான் திட்டம் 2017- 18 இன் அடிப்படையில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு களைய வேண்டி, இந்தியா முழுவதிலும், நியாயவிலை அங்காடிகளிலும், அயோடின் கலந்த உப்பு, A+Dவைட்டமின் கொண்ட எண்ணை அதேபோல் Dவிட்டமின் கலந்த அரிசி, கோதுமை மாவு, என உணவு பொருட்களில் அரசு ஆலோசனை செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. எனவே, பொதுமக்கள் தரமான, உணவு மற்றும் சுகாதாரமான உணவு நுண்ணூட்டச் சத்து கொண்ட உணவுகளை கொண்டும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் ஆக 5 கிராம் உப்பு, 10 கிராம் சர்க்கரை, 15 மில்லி எண்ணெய் அளவு நாம் தினசரி எடுத்துக் கொள்ளக் கூடிய அளவை சுட்டிக்காட்டியுள்ளது எனவே இதன் அடிப்படையில் நாம் விழிப்புணர்வாக நம்மை நாமே தற்காத்துக் கொண்டும், குறைபாடு இருக்கும் போது, மேல் காணப்பட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் வழியாகவும், குறிப்பாக உணவு சம்பந்தப்பட்ட புகார்களில், தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் அவர்களின் நேரடிக் கீழ் இயங்கக்கூடிய புகார் எண்: 94440 42322 என்ற எண்ணில், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், என அனைவரும் உணவு சம்பந்தப்பட்ட புகார்கள் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு,நேரடியாக பதிய முடியும். அப்படி பதிவர்களின், விபரங்கள் தகவலாக யாருக்கும், பகிர மாட்டாது.என்ற உறுதி இருப்பதை சுட்டிக்காட்டி, பேசினார்.
இதனைத்தொடர்ந்து நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் கௌரவத்தலைவர் திரு. சுரேஷ். அவர்கள் வங்கி மேலாளர் (ஓய்வு) வங்கி பண பரிமாற்றங்கள், வங்கி கணக்கு துவக்கம், வங்கி வட்டி விகிதங்கள், ஆன்லைன் மோசடி போன்ற விழிப்புணர்வு மற்றும் காவலன் -SOS(APP) செயலி குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
நிறைவாக அதியமான் கல்வியல் கல்லூரியின் பேராசிரியர். திருமதி உமா ராணி அவர்கள் நன்றியுரை கூறி, தேசிய கீதத்துடன் நிறைவுற்றது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!