Home » உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக்காக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்படுகிறது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக்காக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்படுகிறது

by Poovizhi R
0 comment

உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.ஆகையால் தளபதி அவர்களின் சொல்லுக்கினங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) இன்று பகல் 11 மணியளவில் நடைப்பெறும்.அதே சமயம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகரம், நகரம், ஒன்றியம், சார்பு அணி மற்றும் பகுதிகளில் சார்பில் தாங்கள் உள்ள இடங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை மதியம் உணவு வழங்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவேளை (மதியம்) உணவு வழங்கும் இடங்கள்:-1). ஓசூர்.2). கிருஷ்ணகிரி3). காவேரிப்பட்டணம்4). பர்கூர்5). ஊத்தங்கரை6). தளி7).தேன்கனிக்கோட்டை8). கெலமங்கலம்9).வேப்பனஹள்ளி10). சூளகிரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை தளபதி மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!