Home » கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை கிறிஸ்து லுத்தரன் நூற்றாண்டு திருச்சபை ஆலயத்தில், சிலுவையில் அறையும் நிகழ்வில் ஏராளமன கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை கிறிஸ்து லுத்தரன் நூற்றாண்டு திருச்சபை ஆலயத்தில், சிலுவையில் அறையும் நிகழ்வில் ஏராளமன கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையில் அமைந்துள்ள கிறிஸ்து லுத்தரன் நூற்றாண்டு திருச்சபை ஆலயத்தில்,பாவங்களை நீக்கி இரட்சிக்கும்படியாக சிலுவையில் அறையும் படி தன்னை ஒப்புக்கொடுத்த நிகழ்வில் ஏராளமன கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு…………….. …………………………………மானுகுலத்தின் பாவங்களை மன்னித்து, உலக மக்கள் யாவரையும் இரட்சிக்கும்படியாக, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த இயேசு, யுதமன்னன் பிலாத்துவால் சிலுவை தீர்ப்பு கூறப்பட்டு, தலையில் முள் கிரீடம் அணிவித்து, கல்வாரி மலைக்கு சிலுவையுடன் இழுத்துச் செல்லப்பட்டு, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.இதனை நினைவு கூறும் வகையில், கிருஷ்ணகிரி லண்டன் பேட்டை ஐ.இ.எல்.சி மிஷின் காம்பவுண்டில் அமைந்துள்ள கிறிஸ்து லுத்தரன் நூற்றாண்டு திருச்சபையின் சார்பில், போதகர் நெகேமிய தலைமையில் நடைபெற்ற சிலுவைபாதைநடைப்பெற்றது.இதில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக, கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோல்களில் பாரமான சிலுவையை சுமந்து வந்த இயேசுவை, பிலாத் மன்னனின் காவலர்கள் சாட்டையால் அடித்து இழுத்து வந்து சிலுவையில் அறைவது போன்ற நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது. நகரின் பல்வேறு முக்கிய சாலைவழியாக சென்ற இந்த சிலுவைப் பாதையின் முடிவில் லுத்திரன் சர்ச்சியில் சிறப்பு திருப்பலியுடன் முடிவடைந்தது,இந்த நிகழ்சியின் போது திருச்சபையின் பொருப்பாளர்கள் மலர்வேந்தன், தயானந்தன், பால்ராஜ் மற்றும் சபையோர்கள் முன்னிலையில் ஜான்பாஸ்கர் குழுவினர்கள் சிலுவைபாதை காட்சிகளை சிறப்பாக செய்து காண்பித்தது, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருந்தது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!