Home » கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் விழா நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் விழா நடைப்பெற்றது.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி அருகே உள்ள காமராஜர் நகரில்உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரிமத்திய மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியில் பல்வேறு மாற்றுகட்சிகளில் இருந்து விலகியவர்கள் இணையும் விழா நடைப்பெற்றது.தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட அமைப்புசெயலாளர் வழக்கறிஞர் சக்தி தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பேச்சாளர் மாரிமுத்து,கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் பாரதிராமசந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.மேலும் இந்தக் கூட்டத்தின் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய பெண்கள் உள்ளிட 300-க்கு மேற்பட்டவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் சத்தி முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சி துண்டுகள் அணிவித்து வரவேற்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து நடைப்பெற்றக் கூட்டத்தின் போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் சுங்கச்சாவடியை அகற்றிட வேண்டும், இல்லை என்றால் விரைவில் மிகப்பெரிய அளவில் மக்களைத் திரட்டி சுங்கச்சாவடியை முற்றுகைப் பேராட்ட நடத்துவது என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது..இந்தக் கூட்டத்தில்வெங்கடேஷ் அருள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளும் கலத்துக்கொண்டனர்கள், கூட்டம் முடிவில் ஆனந்தன் நன்றியுரை ஆற்றினர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!