Home » ஊத்தங்கரை அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் மற்றும் பாம்புகளை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி.

ஊத்தங்கரை அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் மற்றும் பாம்புகளை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அப்பிநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அப்பிநாயக்கன்பட்டி அழகன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சென்ற ஆண்டு செய்த தொடர் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பிய நிலையில் கோடை காலம் தொடங்கியும் ஏரியில் இந்த முறை தான் நீர் உள்ளது. இந்த ஏரியில் இன்று தொடர்ந்து மீன்கள் மற்றும் பாம்புகள் செத்து மிதந்துள்ளதை பார்த்து உள்ளூர் பகுதியை சார்ந்த இளைஞர்கள் பொதுமக்களிடம் தெரிவித்தனர் அப்பகுதியில் மீன் பிடிப்பது வழக்கமாக இருந்து வந்த நிலையில் இன்று காலை ஏரியில் இறந்த மீன்கள் மற்றும் பாம்புகள் அனைத்தும் செத்து மிதந்து கொண்டிருந்தது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம பொதுமக்கள் ஊத்தங்கரை காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் ஆடு,மாடுகள் மேய்த்து வருபவர்கள் யாரும் தண்ணீர் அருந்த கூடாது என்பதற்காக கிராம மக்கள் ஏரியில் காவல் காத்து வருகின்றனர் இந்த சம்பவம் தொடர்பாக தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிகள் வந்த பிறகு மீன்கள் மற்றும் பாம்புகளின் இறப்புக்கான காரணம் என்ன என்பதை தெரியவரும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!