Home » பென்னாகரம் அருகே சீலநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஐம்பெரும் விழா நடைபெற்றது.

பென்னாகரம் அருகே சீலநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஐம்பெரும் விழா நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

பென்னாகரம் அருகே சீலநாயக்கனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற் படுத்தும் ஐம்பெரும் விழா நடைபெற்றது.தருமபுரி மாவட்ட இயற்கையை காப்போம் அமைப்பு மற்றும் சீலநாயக்கனூர் தொடக்கப் பள்ளி இணைந்து சிட்டுக் குருவிகள் தினம், காடுகள் தினம், நீர் தினம், புவி தினம், பல்லு யிர் பாதுகாப்பு தினம் உள்ளிட்ட ஐந்து சுற்றுச்சூழல் தினங்களை முன்வைத்து விழா நடைபெற்றது. உலக வெப்பமயமா தல், நீர்நிலைகள் பாதுகாப்பு, காற்று மாசுபாடு, புவியை பாது காப்பதன் முக்கியத்துவம், பல்லுயிர்களின் வாழ்விடத்துக்கு துணை நிற்கும் வகையிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசி ரியர் கி.தாமோதரன் தலைமை வகித்தார்.இவ்விழாவில் புவி வெப்பமயமாதலைக் குறைக்க மரங்களை நடு வதும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதும், நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாடல், கவிதை, ஒவி யப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில், நல்லாம்பட்டி தமிழர் தற்காப்பு கலைக் குழுவி னரின் இயற்கை விழிப்புணர்வு தற்காப்பு கலைநிகழ்வு நடை பெற்றது. மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் 200-க்கும் மேற்பட்ட கனி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் இயற் கையை காப்போம் தலைமையக ஆசிரியர் கோ.தாமோதரன், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற அல்லிமுத்து, தலைமை ஆசிரியர்கள் செல்வராஜ், கார்த்திக், ராஜ்குமார், கிருஷ்ண மூர்த்தி, கோவிந்தசாமி, தற்காப்புக் கலை ஆசிரியர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!