Home » தருமபுரி மாவட்ட ஆட்சி தலைவர் கி.சாந்தி மானியதஅள்ளி கிராமத்திற்கு நேரடியாக சென்று விவசாயிகளிடமிருந்து விருப்பமனு பெற்றார்

தருமபுரி மாவட்ட ஆட்சி தலைவர் கி.சாந்தி மானியதஅள்ளி கிராமத்திற்கு நேரடியாக சென்று விவசாயிகளிடமிருந்து விருப்பமனு பெற்றார்

by Poovizhi R
0 comment

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மானியதஅள்ளி கிராமத்திற்கு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் நேரடியாக சென்று. வேளாண் அடுக்கு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு. இத்திட்டத்தில் (Grains) இணைவதற்கான விருப்ப மனுக்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுகொண்டார்கள்.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மானியதஅள்ளி கிராமத்திற்கு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் நேரடியாக சென்று, வேளாண் அடுக்கு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு. இத்திட்டத்தில் (Grains) இணைவதற்கான விருப்ப மனுக்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுகொண்டார்கள்.தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையின் விவசாயிகள் பெய வேளாண் அடுக்க திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாக வேளாண் அடுக்கம் (Agri Stack) என்ற திட்டத்தினை செயல்படுத்த உள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை. வேளாண்மை-உழவரி நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கூட்டுறவு துறை, பட்டுவளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்புத்துறை விதை சான்றளிப்புத்துறை, சர்க்கரைத்துறை உள்ளிட்ட 13 துறைகளில் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்ட பலன்களும் கிடைக்க செய்யும் வகையில் GRAINS என்ற வலைத்தளத்தில் விவசாயிகளின் விவரங்கள் குறிப்பாக நில உடைமை விவரம் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கப்பட்டு வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.இப்பணி குறித்து இன்று மானியதஅள்ளி கிராமத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இதில் கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியினை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்கள். மேலும், GRAINS என்ற வலைத்தளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்வதற்காக, ஆதார் அட்டை நகல் கணினி சிட்டா, வங்கி புத்தக நகல், விவசாயின் புகைப்படம். கைப்பேசி எண் விவசாய பெருமக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க கேட்டுக் கொண்டார்கள்.இதனைதொடர்ந்து, மானியதஅள்ளி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு. 2 விவாசாயிகளுக்கு மானிய விலையில் விசைதெளிப்பான், தார்பாய்களை வழங்கினார்கள்.முன்னதாக, பாளையம் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைப் பற்றியும். சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டறிந்தார்கள்.இந்த ஆய்வின் போது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.மாலினி, வேளாண்மை உதவி அலுவலர் திரு.இளங்கோவன், வேளாண் அலுவலர் திரு.ஆர்.இளங்கோவன், உதவி வேளாண் அலுவலர் திரு ஜனார்த்தனன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!