Home » கிருஷ்ணகிரி அருகே சிறுதொண்டர் நாயனர் குருபூஜை விழாவில் கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லக்குமார் கலந்துகொண்டார்

கிருஷ்ணகிரி அருகே சிறுதொண்டர் நாயனர் குருபூஜை விழாவில் கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லக்குமார் கலந்துகொண்டார்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி அருகே சிறுத்தொண்டர் நாயனர் குருபூஜை விழாவில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் தொகுதி மக்களுக்கு தேர்தல் வாக்குறிதியின்போது அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி ரயில்வேத் திட்டத்தினை எப்படியும் நிறைவேற்றியே திருவேன்என உறுறித்ப்பட குறிப்பிட்டார்.கிருஷ்ணகிரி அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீகாலபைரவர் திருக்கோவில் சிறுத்தொண்டர் நாயனார் குருபூஜை மற்றும் சமுதாய தொண்டில் ஈடுப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.ஸ்ரீகாலபைரவர் சுவாமி தலைமையில் நடைப்பெற்றது.இந்த விழாவிற்கு மாவட்ட நீதிபதி லீலா,காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன், காவல் ஆய்வாளர் சந்தேஷ்குமார், ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் பழனிவேல், வழக்கறிஞர் யுவராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, சேகர், ஆடிட்டர் வடிவேல், விக்னேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்து சிவவழிப்படு குறித்து உரை ஆற்றினார்கள்.மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் இறைவாழிபாடு ஒன்றே உலகத்தினை நல்வழிப்படுத்தும் என குறிப்பிட்டார் மேலும் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கேரிக்கையாக இருந்து வரும் ரயில்வே திட்டத்தினை செயல்படுத்துவேன் என வாக்குறிதி அளிக்கப்பட்டது, ஆட்சிமாற்றத்தின் காரணமாக இந்த திட்டம் சற்று காலதாமதம் மாகிவிட்டது, தற்போது இந்த ரயில்வே திட்டம் செயல்படுத்திட முதல்கட்டமாக நிதியும் ஒதிக்கீடு செய்யப்பட்டு ஆய்வு பணிகளும் நடைப்பெற்று வருகிறது, ஆகையால் தொகுதிகளுக்கு தேர்தல் வாக்கு நிதியாக தெரிவிக்கப்பட்ட இந்த திட்டத்தினை எப்படியும் நிறைவேற்றியே தீருவேன் என உறுதிப்பட தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து, காவல்துறை, அரசியல், கலைத்துறை, இசைத்துறை, நீதிதுறை மற்றம் சமுதாயத் தொட்டில் ஈடுப்பட்டவகளை பாராட்டி அவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பொற்கிழியும் வழங்கிப் பாராட்டப்பட்டது.இந்த விழாவில் ஏராளமான சிவபக்தர்கள் மற்றும் சிவனடியார்களும் கலந்துக்கொண்டனர்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!