Home » கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ரூ 8 கோடியே 5 இலட்சம் மதிப்பீட்டில் மக்கள் நல திட்ட பணிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை!மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் MLA – கலெக்டர் தீபக் ஜேக்கப் பங்கேற்பு!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ரூ 8 கோடியே 5 இலட்சம் மதிப்பீட்டில் மக்கள் நல திட்ட பணிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை!மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் MLA – கலெக்டர் தீபக் ஜேக்கப் பங்கேற்பு!

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ரூ.5 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி வலுப்படுத்துதல், கல்வெட்டு மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் மற்றும் பார்த்தாகோட்டா முதல் டி. குருபரப்பள்ளி வரை ரூ. 2 கோடியே 55 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய இதர வட்ட சாலையாக தரம் உயர்த்தும் பணிகளுக்கு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரமான இராணிப்பேட்டை ஆர். காந்தி அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y. பிரகாஷ், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் P.முருகன் Ex Mla, இராணிப்பேட்டை மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ,மாநகர ,ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!