Home » ஊத்தங்கரை அடுத்த வீராட்சிக்குப்பத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்ட பூமி பூஜை! எம்எல்ஏ தமிழ்செல்வம் தொடங்கி வைத்தார்

ஊத்தங்கரை அடுத்த வீராட்சிக்குப்பத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்ட பூமி பூஜை! எம்எல்ஏ தமிழ்செல்வம் தொடங்கி வைத்தார்

by Poovizhi R
0 comment

ஊத்தங்கரை அடுத்த, வீராட்சிக்குப்பம் கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ரேஷன் கடை கட்டும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, வீராட்சிகுப்பம் பஞ்., தலைவர் செல்வி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அ.தி.மு.க., மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவன், ஒன்றிய கவுன்சிலர் வீரபத்திரன், பஞ்., துணைத்தலைவர் பிரபு, கல்லாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். இதில் ஊராட்சி செயலாளர் சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!