Home » மே -1- தொழிலாளர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் அவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் தே.மதியழகன் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்றது

மே -1- தொழிலாளர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் அவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் தே.மதியழகன் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்றது

by Poovizhi R
0 comment

மே -1- தொழிலாளர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு-தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் இன்று (01.05.2023) நடைபெற்றது.”நம்ம ஊரு சூப்பரு, நாம் ஒன்றினைவோம், பசுமையும் தூய்மையும் நமதாக்குவோம்” என்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், பாலிநாயனப்பள்ளி ஊராட்சி, செட்டிப்பள்ளி கிராமத்தில் மே தினத்தையொட்டி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பாக கிராம சபைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு-தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன் அவர்கள் முன்னிலையில் இன்று (01.05.2023) நடைபெற்றது. இந்நிகழ்வில் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவுசெய்யும் பணிகளை துவக்கி வைத்தார்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது:மே தினத்தையொட்டி நமது மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சி திட்டம் 2023-24 தயாரித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்க திட்ட செயல்பாடுகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நான்முதல்வன் திட்டம், குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி குறித்து விவாதிக்கப்பட்டது. 2023-24 நிதியாண்டில் செயல்படுத்தபட வேண்டிய திட்ட பணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தற்போது மே மாதம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் மாலை 2 மணி முதல் 4 மணி வரை நேரடியாக வெயில் படும் இடங்களை தவிர்க்க வேண்டும். போதுமான அளவு தர்னனீர் பருக வேண்டும். வெயில் தாக்கம் அதிகமானால் உயர் இரத்த அழுத்தம், மயக்கம் போன்ற உடலில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படவாய்ப்புள்ளது. அதேப்போல கால்நடைகளையும் நிழவில் பராமரிக்க வேண்டும். மேலும் வரும் 15 ம் தேதி வரை நமது கிராமங்களை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மாலை 6 மணிக்கு தூய்மை படுத்திட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மஞ்சபைகளை பயன்படுத்தவேண்டும். பாலிநாயனப்பள்ளி ஊராட்சி பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு எழங்க வேண்டும்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு புதுமை பெண் திட்டத்தின் கீழ் பெண் உயர் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு மாதாந்திர உதவித் தொகை வழங்கி வருகிறது. நமது கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளி இடை நிற்றலை தவிர்த்து அனைவரும் பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் உறுதி செய்திட வேண்டும். நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுபாட்டைத் தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல், நீர் நிலைகளின் தண்ணீர் சேகரிக்க உரிய கால்வாய்களை துார்வாரி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவைத்தை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருதிபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து பாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் “எங்கள் கிராமம்- எழில் மிகு கிராமம்” என்ற உறுதி பொழியை பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் உறுதிபொழி எடுத்துக்கொண்டனர்.உறுதிமொழியானது : நான் எப்போதும் மலம் கழிக்க கழிப்பறையை மட்டுமேபயன்படுத்துவேன். குப்பகளை தரம் பிரித்து தூய்மை காவர்களிடம் வழங்குவேன், என் குப்பை என் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன். எனது வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரை தெருக்களில் தேங்க விடாமல் பாதுகாப்பாக அகற்றுவேன், எப்போதும் எனது சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பேன். கடைகளுக்கு வெளியே செல்லும் போது துணிப்பையை உடன் எடுத்துச் செல்வேன். நமது கிராமத்தை எழில்மிகு கிராமமாக மாற்றும் முயற்சியில் நாள் பங்கேற்பதுடன், என் குடும்பத்தினரையும் பங்கேற்க வைப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.தொடர்ந்து நடைபெற்ற நம்ம ஊரு சூப்பரு, நாம் ஒன்றினைவோம், பசுமையும் தூய்மையும் நமதாகுவோம் என்ற விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டனர்.இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு. மகாதேவன், உதவி திட்ட அலுவலர் (வீட்டு வசதி) திரு. மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை) திரு.கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குநர் (வேளாண்மை) திரு.கிருஷ்ணன், துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி.தாட்சாயினி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி.மணிமேகலைநாகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சுப்பிரமணி, திரு.பாலாஜி, வட்டாட்சியர் திருமதி, திலகம், உதவி திட்ட அலுவலர்கள் (மகளிர் திட்டம்) திரு.பிரபாகர், திரு. ராஜீவ்காந்தி, ஊராட்சி மன்ற தலைவர் திரு.மகேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் திரு.விஜி.ராஜேந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!