Home » குழந்தைகளுக்கான கதை சொல்லுதல் உள்ளிட்டநிகழ்வுகள் சின்னப்பள்ளத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.

குழந்தைகளுக்கான கதை சொல்லுதல் உள்ளிட்டநிகழ்வுகள் சின்னப்பள்ளத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகள்,உணவு முறைகள்,வாழ்வியல் முறைகள்,உள்ளிட்டவைகளை கொண்டு சேர்க்கும் நோக்கோடு குழந்தைகளுக்கான கதை சொல்லுதல் உள்ளிட்டநிகழ்வுகள் சின்னப்பள்ளத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.முன்னதாக கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு அறிவியல் ஆர்வத்தையும் கணிதத்தில் நாட்டத்தையும் ஏற்படுத்தஎங்கும் அறிவியல் யாவும் கணிதம் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறிவியல் சோதனைகள் கணித புதிர்கள், வார்த்தை விளையாட்டு, மேஜிக்உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை வானவில் மன்ற கருத்தாளர் பிரியா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்இலக்கியா, ராஜேஸ்வரி,மங்கம்மாள், ஜெயந்திகலைச்செல்வி உள்ளிட்டோர் குழந்தைகளிடம்நிகழ்வுகளை செய்து காட்டினார்கள்.பின்னர் மாணவர்களுக்கு கதை புத்தகங்களும் எழுது பொருட்களும் தலைமை ஆசிரியர் மா. பழனி வழங்கினார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!