Home » சிக்கபூவத்தியில் ஸ்ரீகனக துர்க தேவி திருக்கோவிலில் சித்திரா பெளர்ணமியையொட்டி சத்தியநாராயண பூஜை வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது,

சிக்கபூவத்தியில் ஸ்ரீகனக துர்க தேவி திருக்கோவிலில் சித்திரா பெளர்ணமியையொட்டி சத்தியநாராயண பூஜை வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது,

by Poovizhi R
0 comment

சிக்கபூவத்தி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகனக துர்க தேவி திருக்கோவிலில் சித்திரா பெளர்ணமியையொட்டி உலக நண்மை வேண்டி சத்தியநாயண பூஜை வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது,இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அருகே உள்ள சிக்கப் பூவத்தி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கனக துர்க தேவி திருக்கோவில்23-ஆண்டு சித்ரா பெளர்ணமி விழா நடைப்பெற்றது.இந்த விழாவினையொட்டி பால்குடங்களுடன் கலந்துக்கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஸ்ரீ கனக துர்கதேவி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து கோவில் முன்பாக சத்தியநாரயணபூஜை வெகு சிறப்பாக நடைப்பெற்றது.உலக நன்மை வேண்டி நடத்தப்பட்ட இந்த பூஜையின் கிருஷ்ணகிரி, ஆலப்பட்டி, சிக்கப் பூவத்தி, இராயக்கோட்டை மட்டுமின்றி பெங்களூரில் இருந்து ஏராளமானவர்கள் இந்த பூஜையில் கலந்துக்கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேறினார்கள்,இதனைத்தொடர்ந்து ஸ்ரீ கனக துர்க தேவி அம்மன் பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்த அம்மனுக்கு சிறப்பு பூஜையும்,கற்பூர தீபாதரனைகளும் நடைப்பெற்றது,இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத்தலைவர் சேகர், வழக்கறிஞர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்,இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருமதி சுஜாதா பத்பநாபன், திருமதி கிருஷ்ணவேணி திம்மராயன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகளும் சிறப்பாக செய்துவருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!