Home » புஷ்பகிரி  புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா மாபெரும் வானவேடிக்கையுடன், வெகு விமரிசையாக நடைபெற்றது.

புஷ்பகிரி  புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா மாபெரும் வானவேடிக்கையுடன், வெகு விமரிசையாக நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பளிளி அருகே புஷ்பகிரியில் அமைந்துள்ள புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா மாபெரும் வானவேடிக்கையுடன், வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துக்கொண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம்  வரட்டனப்பள்ளி அருகே புஷ்பகிரியில் அமைந்துள்ள புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா  வெகு விமரிசையாக நடைபெற்றது.கடந்த 3-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய இந்த தேர் திருவிழாவின் போது, நாள்தோரும் ஆலயத்தின் பங்கு தந்தையர்களால்  நவநாள் ஜெபங்களுடன், சிறப்பு திருப்பலி நடைபெற்றது.இவ் விழாவின் இறுதிநாளான இன்று, திருத்தேர் பவணி வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் முனைவர். லாரன்ஸ் பயஸ்தலைமையில்  சிறப்பு திருப்பலி பூஜையுடன்  புது நன்மை மற்றும் உறுதிபூசூதல் ஆகிய அருட்கொடைகள் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் வழங்கப்பட்டது.பின்னர்,  புனித மலர்மலை மாதாவின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவணி நடைபெற்றது. வானவேடிக்கையுடன் துவங்கிய தேர் பவணியை, மறைவட்ட முதன்மைக்குரு அருட்திரு. ஜார்ஜ் புனித நீர் தெளித்து, மந்திரித்து துவக்கி வைத்தார். பவனி வந்த திருத்தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றினை தூவி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.இந்த திருவிழாவில், கிருஷ்ணகிரி, சுண்டம்பட்டி, எலத்தகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிருஸ்தவ மக்கள் கலந்துக்கொண்டனர்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ராபர்ட் சிறப்பாக செய்திருந்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!