Home » அரசு பள்ளி சுற்று சுவர் அருகே மீண்டும் ஒரு சுற்று சுவர் அமைக்கும் ஊராட்சி தலைவர் – 25 குடும்பங்கள் உள்ள வன்னார்கொட்டாய் கிராம மக்கள் பாதையின்றி தவிப்பு

அரசு பள்ளி சுற்று சுவர் அருகே மீண்டும் ஒரு சுற்று சுவர் அமைக்கும் ஊராட்சி தலைவர் – 25 குடும்பங்கள் உள்ள வன்னார்கொட்டாய் கிராம மக்கள் பாதையின்றி தவிப்பு

by Poovizhi R
0 comment

அரசு பள்ளி சுற்று சுவர் அருகே மீண்டும் ஒரு சுற்று சுவர் அமைக்கும் ஊராட்சி தலைவர் – 25 குடும்பங்கள் உள்ள வன்னார்கொட்டாய் கிராம மக்கள் பாதையின்றி தவிப்புகிருஷணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் வன்னார்கொட்டாய் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி சுற்றுசுவர் அருகே உள்ள பாதையை கடந்த மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காட்டாகரம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தில் 16.25 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகளை துவக்கியுள்ளார். ஏற்கனவே உள்ள சுற்று சுவருக்கு அருகே சுமார் 7 அடி தள்ளி புதிய சுற்று சுவர் அமைக்கிறார். வன்னார் கொட்டாய் பகுதி மக்கள் இந்த சுற்று சுவரை ஒட்டியுள்ள வழிபாதையை அடைத்து இப்பணியை மேற்கொள்வதால், இக்கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வன்னார் கொட்டாய் கிராம மக்கள் காட்டாகரம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனிடம் வழிபாதையை அடைக்க வேண்டாம் என முறையிட்டும், அவர் தொடர்ந்து வழிபாதையை ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றம் சாட்டி கிராம மக்கள் 50ற்கும் மேற்பட்டோர் இன்று கட்டுமான பொருட்களை கொண்டு வந்த லாரியை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதுகுறித்து வன்னார்கொட்டாய் பகுதியை சேர்ந்த லலிதா அவர்களிடம் கேட்டபோது, மூன்று தலைமுறைகளாக இந்த வழியை பயன்படுத்தி வருகிறோம். இந்த வழியில்தான் சந்தூர் சுடுகாட்டிற்கு செல்ல முடியும். அதேபோல் சந்தூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்லக்கூடிய பாதையாகும். இவயனைத்தையும் காட்டாகரம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் பொருட்படுத்தாமல், ஏற்கனவே அமைக்கப்பட்ட சுற்று சுவர் அருகே மீண்டுமொரு புதிய சுற்று சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். காழ்புணர்ச்சி காரணமாக, இந்த பாதையை அடைக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். எங்கள் கிராமத்தில் 20ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல பாதையில்லை. அத்தியாவசிய பொருட்களை வாங்க சந்தூர் செல்ல இப்பாதையை தவிர வேறு எந்த பாதையும் எங்களுக்கு இல்லை என தெரிவித்தார்.இதுகுறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி அவர்களிடம் கேட்டபோது, ஊராட்சி மன்ற தலைவர் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் சுற்று சுவர் அமைப்பதாக தெரிவித்தார். ஆனால் ஏற்கனவே அமைக்கப்பட்ட சுற்றுசுவருக்கு அருகே கட்டுவது பற்றி எனக்கு தெரியாது. திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!