Home » ஒசூரில் தனியார் நிறுவன பங்களிப்புடன் தூர்வாரி புணரமைக்கப்பட்ட ஏரியை மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா முன்னிலையில் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது

ஒசூரில் தனியார் நிறுவன பங்களிப்புடன் தூர்வாரி புணரமைக்கப்பட்ட ஏரியை மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா முன்னிலையில் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது

by Poovizhi R
0 comment

ஒசூரில், தனியார் நிறுவன பங்களிப்புடன் தூர்வாரி புணரமைக்கப்பட்ட ஏரியினை மாநகர மேயர் முன்னிலையில் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டதுகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, அலசநத்தம் பகுதியில் உள்ள ஓட்டேரி என அழைக்கப்படும் ஏரியினைகன்சாய் நிரோலக் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரி புணரமைக்க கடந்த ஜனவரி மாதம் ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்திருந்தார்..இந்தநிலையில் தற்போது ஓட்டேரி எனப்படும் ஏரி 2.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு 14.5 ஏக்கர் நிலப்பரப்பிலான ஏரியினை தூர்வாரி புணரமைக்கப்பட்டு ஏரி சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயணம் மேற்க்கொள்வதற்கான வசதிகளும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன..கன்சாய் நிரோலக் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியில் 24லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த பணிகளை மேற்க்கொண்டு இன்று ஓசூர் மாநகர மேயர் சத்யா அவர்கள் முன்னிலையில் இன்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைக்கப்பட்டது..ஒசூர் மாநகர மேயர் அவர்கள் ஏரி சுற்றிலும் 200 மரக்கன்றுகளை நடுவதை துவக்கி வைத்தார் . இந்நிகழ்வில் நிரோலக் நிறுவனத்தின் சுதிர் பிரல்யாட் ரானே,தமிழ்வாணன் உள்ளிட்டோரும் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர் ஆஞ்சி மற்றும் மாணிக்கவாசகம், ஹரி பிரசாத், பிரகாஷ் தினேஷ், எல்லப்பா, சிவா,உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!