Home » முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவு சமைக்க SHG/PLF/ALF உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு வழிமுறைகள்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவு சமைக்க SHG/PLF/ALF உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு வழிமுறைகள்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவு சமைக்க SHG/PLF/ALF உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணியினை SHG/PLF/ALF (முன்னுரிமை மகளிர் சுய உதவிக்குழு) உறுப்பினர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு / ஊராட்சி/ பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளை பின்பற்றி கிராம ஊராட்சி அளவிலான/ பேரூராட்சி அளவிலான முதன்மைக் குழு (Coree committee) மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும்.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவமுள்ள SHG/PLF/ALF ல் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருப்பவராக இருக்க வேண்டும்.தேர்ந்தேடுக்கப்படும் SHG/PLF/ALF -ல் உறுப்பினர் அதே கிராம ஊராட்சியில்/நகர்புற பகுதியில் வசிப்பிடமாக கொண்டு வசிப்பவராக இருக்க வேண்டும்.விதிவிலக்கு – ஊராட்சி/பேரூராட்சி முதன்மைக் குழு தகுதியான SHG/PLF/ALF உறுப்பினர்கள் அதே ஊராட்சியில் தகுதியானவர்கள் இல்லை என்று சான்றளிக்கும்பட்சத்தில் மட்டுமே, அருகில் உள்ள ஊராட்சி/பேரூராட்சிகளை சார்ந்த சுய உதவிக் குழு//PLF/ALF உறுப்பினர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் பணிகளை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.காலை உணவை சமைப்பதற்கும் பரிமாறுவதற்கும் தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உணவு தயாரிப்பதில் போதுமான/அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் படிக்க வேண்டும்.SHG உறுப்பினர் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.• மலைப்பாங்கான, தொலைதூர மற்றும் பழங்குடியின கிராமங்களில் 10ஆம் வகுப்பு வரை பயின்ற மகளிர் சுய உதவிக்குழு இல்லையெனில் 8-ஆம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய”ANDROID மொபைல் போன்” வைத்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவில் போதுமான நிதி இருப்பினை கொண்டிருக்க வேண்டும் மற்றும் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு குழு போதுமான நிதி மூலதனத்தை கொண்டிருக்க வேண்டும்.இத்திட்டத்தை செயல்படுத்திடுவதற்கான SHG/PLF/ALF உறுப்பிர்களின் விருப்பம் மற்றும் அது தொடர்பான தீர்மானத்தினை தீர்மானப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும்.பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட SHG/PLF/ALF உறுப்பினர்களில் 3 உறுப்பினர்கள் 1/2/3 மகளிர், இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றுவதற்கு சமையல் பயிற்சி அளிப்பதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் நிகழும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட முதன்மை குழு உறுப்பினர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப், இ.ஆ.ப.., தெரிவித்துள்ளார். அவர்கள்

You may also like

Leave a Comment

error: Content is protected !!