Home » *அறிஞர் அண்ணா கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப விழா* .

*அறிஞர் அண்ணா கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப விழா* .

by Poovizhi R
0 comment

*அறிஞர் அண்ணா கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப விழா* . கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு மே 11 வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவில் தேசியத் தொழில்நுட்ப விழா கொண்டாடப்பட்ட.து . கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் தலைவி முனைவர் இறா ராஜலட்சுமி அவர்கள் வரவேற்புரை யாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு .தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், ஒவ்வொரு ஆண்டும் பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றியை கொண்டாடும் வகையில் இந்தியாவில் தேசிய தொழில்நுட்ப விழா கொண்டாடப்படுகிறது. இன்றைய மாணவர்கள் வானூர்தியியல் மின்னணு , செயற்கைக்கோள்கள் நிலவுக்கும் விண்கலம் அனுப்புதல் தொழில் முனைவோர்கள் போன்ற துறைகளில் விழிப்புணர்வுடன் சிறந்து விளங்க வேண்டும் என்று பேசினார். நிறைவாக உயிர் தொழில் நுட்பவியல் துறையின் உதவி பேராசிரியர் முனைவர் கரோலின் ரோஸ் அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நாட்டுப் பணிவுடன் நிறைவு பெற்றது . முன்னதாக மாணவ மாணவியர்கள் பாரதப் பிரதமரின் உரைகளை கணினி மூலம் கேட்டு அறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

You may also like

Leave a Comment

error: Content is protected !!