Home » கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து வருவாய் துறை காவல் துறை, தீயணைப்புத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.திபக் ஜேக்கப் இ.ஆ. அவர்கள் தலைமையில் இன்று (1205.2023) நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும், நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளும் வகையிலும் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து வருவாய் துறை காவல் துறை, தீயணைப்புத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.05.2023) நடைபெற்றது.மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.திபக் ஜேக்கப் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்ததாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சார் ஆட்சியர் / வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோர் Vulnerable Area பகுதிகளுக்கான கிராம/வார்டு அளவிலான வரைபடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிராம அளவிலான முதல் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தங்காலிக நிவாரண முகாம்கள் முழுமையாக தணிக்கை செய்து தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். புதயிதாக Vulnerable Arca ஏதும் கண்டறியப்பட்டால் அவற்றின் விபரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அனைத்து Vulnerable Arca பகுதிகளுக்கும் தேவையான அளவிற்கு நிவாரண முகாம்களை கண்டறிந்து அவற்றை முழுமையான அளவில் தயார் செய்ய வேண்டும். முதல் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து குழுக்களிலும் பெண்கள் / தன்னார்வலர்கள் உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.வட்ட அளவில் பாம்புகள் பிடிக்கும் நபர்களின் விபரங்கள், மோட்டார் படகுகள் / பரிசல்கள் விபரங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரகால சூழ்நிலைகளில் பங்கெடுத்து பணியாற்றும் வகையில் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், ஆயில் கார்பரேஷன் நிறுவனங்கள் ஆகியோர் அடங்கிய கோட்ட அளவிலான கூட்டம் நடத்தி பேரிடர் காலத்தில் பங்காற்ற அறிவுறுத்த வேண்டும். பேரிடர் மீட்பு மற்றும் வெளியேற்றுதல் பணிகளுக்கு தேவையான சாதனங்கள் ஜேசிபி, மர அறுவை இயந்திரங்கள், வாகனங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள், உயர் மின்விளக்குகள், மோட்டார்பம்பு செட்டுகள், டீசல் ஜெனரேட்டர், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் அவை உள்ள இருப்பிடம் மற்றும் உரிமையாளர் விபரங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒலிப்பெருக்கி பொருத்திய வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை செய்ய வேண்டும்.தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வட்டார அளவில் கல்வி நிறுவனங்கள், பேரிடரால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் போலி ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பேரிடர் மீட்பு சாதனங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். காவல் துறையினர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் திருடு மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் ஏற்படாதவாறு காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவேண்டும். மேலும் Highly Valnerable Area பகுதிகளன விரைவாக சென்று சேரவும், தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள செல்லும் வகையில் Green Corridor Traffic Plan வகுத்துத் தர வேண்டும்.வட்டாட்சியர்கள் மழைமானி நிலையங்களை ஆய்வு செய்து அவை நல்ல முறையில் செயல்படுவதையும், இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான பொதுக் கட்டிடங்களை தணிக்கை செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் 10 முதல் தகவல் அளிப்பவர்களின் விவரங்களை சரியானவாறு பெற்று வைக்கப்பட வேண்டும்.ஊராக வளர்ச்சி துறை அலுவலர்கள் கால்வாய்கள், நீர்நிலைகள் மற்றும் Culvert ஆகியவற்றை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு பகுதிகளை அதிகரிக்க வேண்டும். செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.மாநகராட்சி / நகராட்சி ஆணையாளர்கள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகாதவாறு கழிவுநீர் கால்வாய்களில் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும். தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் பட்சத்தில் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலையில் உள்ள குழிகளை மூட வேண்டும். நிவாரன மையங்களுக்கு தேவையான சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.பள்ளி கட்டிடங்கள் உறுதியுடன் இருப்பதையும், அவசர காலங்களில் நிவாரண மையமாக செயல்பட ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள திறந்த கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்து மூடப்பட வேண்டும். கட்டிடங்களின் மேற்பகுதிகளில் நீர் தேங்காதவாறு சுத்தப்படுத்தி வைக்க வேண்டும்.மருத்துவத்துறை அலுவலர்கள் முகாமில் தங்க வைக்கும் நபர்களுக்கு தேவையான நோய் தடுப்பு மாத்திரைகள், முககவசம், கிருமி நாசினி ஆகியவை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். கால்நடைபராமரிப்புத்துறை அலுவலர்கள் வெள்ள பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கும் பகுதிகளில் முன்னதாக கால்நடை நிவாரண மையங்கள் அமைக்க வேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான ஊசி மருந்துகள், தீவனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.மின்சாரத்துறை அலுவலர்கள் தாழ்வாக உள்ள மின்கம்பிகள், பழுதடைந்த மின்கம்பங்கள்உடனடியாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண மையங்களுக்குஜெனரேட்டர் மற்றும் மின்விளக்கு வசதிகள், டீசல் ஜெனரேட்டருக்குத் தேவையான டீசல் இருப்புஆகியவற்றின் தயார் நிலையை உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் ICU / ICCU வார்டுகளில் தடையற்ற மின்சாரம் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மின் இணைப்புகளை சரிபார்த்து மின்சாரக் கசிவு ஏற்படாதவாறும்,மரக்கிளைகள் மின் இணைப்புகளில் உரசாத அளவிற்கு சுத்தப்படுத்த வேண்டும்.மேலும், அனைத்து துறை அரசு அலுவலர்கள் மழை, வெள்ளம், புயல், இடிமின்னல் போன்ற பேரிடர்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முன்னெச்சரிக்கை செயலியான TNSMART APP பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள் மின்னல் முன்னெச்சரிக்கை செயலி DAMINI MOBILE APP பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில் தேவைப்படும் மீட்பு சாதனங்களின் விவரங்களை IDRN PORTAL ல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தென்மேற்கு பருவமழையின்போது நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளும் வகையிலும் இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுமையான அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோடியப்பன், ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆர்.சரணியா இ.ஆ.ப., வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.முகம்மது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திரு.கோ.பூபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) திருமதி.மிருணாளினி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.தமிழரசி, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திருகுமார், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!