Home » கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு முழுவதும் புனரமைக்கப்பட்ட புதிய திருத்தலத்தின் அர்ச்சிப்பு பெருவிழா.

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு முழுவதும் புனரமைக்கப்பட்ட புதிய திருத்தலத்தின் அர்ச்சிப்பு பெருவிழா.

by Poovizhi R
0 comment

புனித பாத்திமா அன்னை திருத்தல அர்ச்சிப்பு பெருவிழாகிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, முழுவதும் புனரமைக்கப்பட்ட புதிய திருத்தலத்தின் அர்ச்சிப்பு பெரு விழா. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு.கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின்    50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, திருத்தலம் பெரும் பொருட்செலவில் முழுவதுமாக புனரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது.1972-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதி, தூய பாத்திமா அன்னை ஆலயம், அன்றைய சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு.செல்வநாதர் அவர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அன்றிலிருந்து நாள்தோறும் ஆலயத்தில் பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.இந்த திருத்தலத்தின் பொன்விழாவை முன்னிட்டு, திருத்தலம் புதுப்பிக்கும் பணிகள் பெரும் பொருட் செலவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. திருத்தல புனரமைப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில்,நேற்று திருத்தல அர்ச்சிப்பு பெரு விழா நடைபெற்றது.திருத்தல பங்குத்தந்தை அருட்திரு. இசையாஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில், தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு.லாரன்ஸ் பயஸ் அவர்கள் கலந்துக்கொண்டு, சிறப்பு திருப்பலி பூஜைகளை நடத்தி, திருத்தலத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்நிகழ்ச்சியின் முடிவில், சுமார் ஐந்தாயிரம் பக்தர்களுக்கு அன்பின் உபசரிப்பாக மதிய உணவு விருந்து கொடுக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொன்விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!