Home » சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்குவதற்கு”மானியத்துடன் கூடிய மின்மோட்டார் பம்ப் செட்டுகள்

சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்குவதற்கு”மானியத்துடன் கூடிய மின்மோட்டார் பம்ப் செட்டுகள்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்குவதற்கு”மானியத்துடன் கூடிய மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.திபக் ஜேக்கப் இ.ஆ.ப, அவர்கள் தகவல்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (ஐந்து ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்குவதற்கு “மானியத்துடன் கூடிய மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்கும் திட்டம்” செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. அதில்,1. ஏற்கனவே EB இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற பம்ப் செட்டுகளை மாற்ற விரும்புபவர்கள்2. தற்போதுள்ள டீசல் பம்ப் செட்டுகள் எலக்ட்ரிக் மோட்டார் பம்ப் செட்டுக்கு மாற்ற விரும்புபவர்கள் (EB இணைப்புகள் பெற்றுள்ளவர்களுக்கு மட்டும் )3. மின் இணைப்பு பெற்ற விவசாயிகளால் புதிய ஆழ்துளை கிணறு / திறந்த வெளிகிணறு/ குழாய் கிணறு அமைத்து புதிய மின்மோட்டார் பெற விரும்பும் விவசாயிகள்ஆவர் .இத்திட்டத்தில் மின்மோட்டார்களை பெற, சென்னை தலைமைப்பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மோட்டார் வாங்க வேண்டும். இதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம், இதில் எது குறைவோ, அந்த தொகை பின்னேற்பு மானியமாக விவசாயின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்,2022-23ஆம் நிதியாண்டிற்கு, பொது பிரிவு விவசாயிகளுக்கு 120 எண்களும் இந்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு- 30 எண்களும் ஆக மொத்தம் 150 எண்கள்/ ரூ.22.50 இலட்சம் மானியத்தில் வழங்கிட இலக்கு பெறப்பட்டுள்ளது. மேலும் 2022- 23 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்து விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நிலவரைபடம், சிறு விவசாயிகளுக்கான சான்று, பாஸ் போர்ட் சைஸ் போட்டோ, விவசாயிகளின் வங்கி கணக்கு எண் மற்றும் மின் இணைப்பு அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் கீழ்கண்ட அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விண்ணப்பிக்கும் விவசாயிகள் பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைத்திருக்க வேண்டும் அல்லது அமைக்க விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும் குறைந்த பட்சம் 4 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்ட பம்ப் செட்டுகள் வாங்க வேண்டும்மேலும், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரக வளாகம், கிருஷ்ணகிரி, திரு. என். சிவகுமார் உதவி செயற்பொறியாளர்(வே.பொ) போன்: 6379284450,9677811270,9443023050 மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, சென்னத்தூர் அஞ்சல் சாணசந்திரம், இராயக்கோட்டை ரோடு, ஓசூர், திரு.கோ.செல்வம், உதவி செயற்பொறியாளர்(வே.பொ) போன்: 7904529765, 9385383896 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!