Home » போச்சம்பள்ளி அருகே 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த எருமை – கிரேன் மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

போச்சம்பள்ளி அருகே 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த எருமை – கிரேன் மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

by Poovizhi R
0 comment

30 அடி ஆழ கிணற்றில் விழுந்த எருமை – கிரேன் மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஒட்டத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சரவணன். இவர் இரண்டு எருமை மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை அவரது விவசாய நிலத்தில் எருமை மாட்டை மேய்ச்சலுக்கு கழற்றிவிட்டுள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக அவரது விவசாய நிலத்தில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த எருமைமாடு அம்மா அம்மா என தொடர்ந்து கூச்சலிட்டுள்ளது. சப்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் விழுந்திருப்பதை அறிந்த சரவணன், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மற்றும் கிராம மக்கள் சேர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடியும் எருமைமாட்டை கிணற்றிலிருந்து தூக்க முடியவில்லை. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு கிரேன் உதவியோடு எருமைமாடு பத்திரமாக மீட்கப்பட்டது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!