Home » தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் போச்சம்பள்ளி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தே.மதியழகன்.MLA பங்கேற்பு

தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் போச்சம்பள்ளி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தே.மதியழகன்.MLA பங்கேற்பு

by Poovizhi R
0 comment

வேளாண் துறை சார்பில் தொழில் முனைவோர்களுக்கான இடைமுக பயிற்சி பட்டறைகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ், தொழில் முனைவோர்களுக்கான இடைமுக பயிற்சி பட்டறை நடந்து வருகிறது. இதில் நுகர்வோருக்கு ஏற்ற உணவு உற்பத்தி, தொழில் முனைவோருக்கான திட்ட அறிக்கை தயாரித்தல், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல், விவசாய விளை பொருட்களை முதன்மை பதப்படுத்தும் நிலையத்தின் மூலம் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது குறித்தும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வளர்ச்சியில் அரசின் பங்கு குறித்தும், பொருட்கள் சந்தை படுத்துதல் குறித்தும் விவசாய தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகளுக்கு பலன் தரும் திட்டங்கள் குறித்து இடைமுக பயிற்சி பட்டறையில் வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதில் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், வேளாண் துணை இயக்குனர் காளிமுத்து, வேளாண் இணை இயக்குனர் முகமது அஸ்லம், தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி, வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!