Home » கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்தும் உரிமையாளர்கள் தங்களது விடுதிகளை பதிவு செய்தும், உரிமம் பெற்று செயல்பட்டு வரும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். உரிமம் பெறாமல் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்கு முறை) சட்டம் 2014 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பெற்றது. அதன்படி தனியரால் நடத்தப்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல், உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்தும் உரிமையாளர்கள் விடுதிகளை பதிவு செய்யவும், உரிமம் பெறவும் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பிக்க www.tnswp.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.பணிபுரியும் மகளிர் விடுதியின் உரிமம் பெற தீயணைப்பு தடையின்மை சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், பொதுப் பணித்துறையின் கட்டிட உறுதித்தன்மை சான்று மற்றும் Form-D உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும். பெண்களுக்கான விடுதி / காப்பகங்களில் விடுதிக் காப்பாளர் பெண்ணாகவும், விடுதி பாதுகாவலர் ஆண்/பெண் ஆகவும் இருக்க வேண்டும். பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை பதிவு செய்யவும், உரிமம் பெறவும் மற்றும் உரிமத்தை புதுப்பிக்கவும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்கு முறை) சட்ட விதிகள் 2015 இல் காணப்படும் படிவம் -1 (Form-1) மற்றும் படிவம்-4 (Form-IV) ஆகியவற்றை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .உரிமம் பெறாமல் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி 2 வருடம் சிறை தண்டனையும் மற்றும் ரூ.50,000/- அபராதமும், அதையும் மீறி நடத்துபவர்கள் மீது ரூ.1 இலட்சம் அபராதமும், 3 முதல் 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.21, மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி, 635115 என்ற முகவரியிலும், தொலைபேசி எண் 04343-235717 மற்றும் dswokrishnagiri2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!