Home » முருக்கம்பள்ளம் கிராம திரெளபதி அம்மன் திருக்கோவிலில் 49-ம் ஆண்டுமகாபாரத திருவிழாவில் அர்சுணன் தபசுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது

முருக்கம்பள்ளம் கிராம திரெளபதி அம்மன் திருக்கோவிலில் 49-ம் ஆண்டுமகாபாரத திருவிழாவில் அர்சுணன் தபசுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது

by Poovizhi R
0 comment

முருக்கம்பள்ளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் திருக்கோவிலில் 49-ம் ஆண்டுமகாபாரத திருவிழாவில் மகாபராத போரில் கௌரவர்களைஅழிக்கஅர்சுணன் தபசுமரம் ஏறும் விழாவில் குழந்தைப் பாக்கியம் வேண்டி ஏராளமன கிராம மக்கள்ஆர்வத்துடன் பங்கேற்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரி அருகே உள்ள முருக்கம் பள்ளம் கிராமத்தில்எழுந்தருளியுள்ளஅருள்மிகு திரெளபதி அம்மன் திருக்கோவிலின் 49-ம் ஆண்டு மகாபாரத பெரு விழாகொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது,இதில் நாள்தோறும் திரரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைளுடன், அம்மன் திருக்கல்யாணம், பஞ்சபாண்டவர்கள் நகர்வலம், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.இதனைத்தொடர்ந்துஓம் சத்திநாடக குழுவினர்களின் பாண்டர்வர் பிறப்பு, கிருஷ்ணன் தூது, அரவான் கடபலி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மகாபாரத தெருக்கூத்தும் நடைப்பெற்று வருகிறது,இதன் ஒரு பகுதியாக இன்றுஅர்சுணன் தபசு மரம் ஏறுதல் நடைபெற்றது. இதில் மகாபாரதப்பாரதப்போரில்கெளரவர்களை வெல்லுவதற்காகசிவபெருமானிடம் பாசுபதம் என்ற ஆயுதம் பெற வேண்டி சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின் அர்சுணன் தபசு மரத்தில் ஏறும் நிசழ்ச்சி வெக விமர்ச்சியாக நடைப்பெற்றது,இரவு துவங்கி, முற்பகல் வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்டத்தின்பல்வேறுகிராம மக்கள் இந்த விழாவில் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் உள்ளிட்ட ஏராளமாவர்கலந்துக் கொண்டு வழிப்பட்டனர்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை.முருக்கம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி காத்தாடிகுப்பம்,வெண்ணாம்பள்ளி,ஜோடுகொத்தூர், மதனகுப்பம், மேல் அக்ரஹாரம், மல்லிநாயனப்பள்ளிஆகிய கிராமங்களை சேர்ந்த தர்மாகர்தாக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!