Home » தமிழ்நாடு டெண்ட் டீலர்கள் சார்பாக மை‌‌ தருமபுரி அமைப்பிற்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு டெண்ட் டீலர்கள் சார்பாக மை‌‌ தருமபுரி அமைப்பிற்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது.

by Poovizhi R
0 comment

*தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் சார்பாக மை தருமபுரி அமைப்பிற்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது*தருமபுரி ஜோதி மஹாலில் தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது. டெண்ட் டீலர்ஸ் டெக்கரேட்டர்ஸ் சங்க கொடியேற்றம், சங்க துவக்க விழா, ஆண்டு மலர் வெளியீடு, பொருட்காட்சி, விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மை தருமபுரி அமைப்பின் தன்னிகரில்லா செயல்பாடுகளை பாராட்டும் விதமாக சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருதினை அகில இந்திய டெண்ட் டீலர்ஸ் பொது செயலாளர் கட்டார் சிங் கோச்சார் அவர்கள் வழங்கினார், மை தருமபுரி குடும்பத்தினர் சார்பாக மை தருமபுரி சதீஸ் குமார், அருணாசலம், சந்திரசேகர், ஜனனி சத்யநாதன், தாரணி, தமிழரசு, சார்லஸ் சஞ்ஜய், வெங்கடேஷ் ஆகியோர் விருதினை பெற்றுக் கொண்டனர். விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த மாநில செயலாளர் மணிகண்டன் சினி டெக்கரேட்டர்ஸ் மணிவேல் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!