Home » ரூ.27 கோடியே 28 இலட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திறன் மின்மாற்றிகளின் தரம் உயர்த்தியும், கூடுதல் திறன் மின்மாற்றி செயல்பாட்டினை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

ரூ.27 கோடியே 28 இலட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திறன் மின்மாற்றிகளின் தரம் உயர்த்தியும், கூடுதல் திறன் மின்மாற்றி செயல்பாட்டினை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

by Poovizhi R
0 comment

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொளி காட்சி வாயிலாக குருபரப்பள்ளி, காமன்தொட்டி, பெண்ணோஸ்வரமடம், பாகலூர் மற்றும் ஜூஜூவாடி ஆகிய 5 துணை மின் நிலையங்களில் ரூ.27 கோடியே 28 இலட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திறன் மின்மாற்றிகளின் தரம் உயர்த்தியும், கூடுதல் திறன் மின்மாற்றி செயல்பாட்டினை இன்று (19.05.2023) துவக்கி வைத்தார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி, காமன்தொட்டி, பெண்ணேஸ்வரமடம், பாகலூர் மற்றும் ஜூஜூவாடி ஆகிய 5 துணை மின் நிலையங்களில் ரூ.27 கோடியே 28 இலட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திறன் மின்மாற்றிகளின் தரம் மற்றும் கூடுதல் திறன் மின்மாற்றிகளின் செயல்பாட்டினை இன்று (19.05.2023) துவக்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெண்ணேஸ்வரமடம் துணை மின் நிலையத்தில் ரூ.4 கோடியே 89 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய 2X10MVA திறன் மின் மாற்றியின் செயல்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் திருமதி.ஏ.ஏஞ்சலா சகாயமேரி ஆகியோர் இன்று (19.05.2023) குத்து விளக்கு ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்கள்மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயனடையும் வகையில் மின்சாரத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெண்ணேஸ்வரமடம் துணை மின் நிலையத்தில் ரூ.4 கோடியே 89 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய 2X10MVA திறன் மின் மாற்றியின் செயல்பாடுகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டிணம், பாலேகுளி, திம்மாபுரம், விநாயகப்புரம், மலையாண்டஹள்ளிபுதூர், காந்தி நகர், எருமாம்பட்டி, பையூர், தளிஹள்ளி, சுப்ரமணியப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நிலவிய குறைந்த மின்னழுத்தம் மற்றும் அதிக மின்பளு நிவர்த்தி செய்யப்பட்டு விவசாய பெருமக்கள் மற்றும் இதர பொதுமக்கள் சுமார் 9,000 பயனாளிகளுக்கு சீரான தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் உள்ள 230/110/33-11KV குருபரப்பள்ளி துணை மின் நிலையத்தில் ரூ.2 கோடியே 41 இலட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் 16MVA -ல் இருந்து 25 MVA -ஆக மின்மாற்றியின் திறன் உயர்த்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகப்புரம், கக்கன்புரம், தீர்த்தம், நாச்சிகுப்பம், ஆவல்நத்தம், ஈ.ஜி.புதூர், கங்கசந்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நிலவிய குறைந்த மின்னழுத்தம் மற்றும் அதிக மின்பளு நிவர்த்தி செய்யப்பட்டு விவசாய பெருமக்கள் மற்றும் இதர பொதுமக்கள் சுமார் 10,000 பயனாளிகளுக்கு சீரான தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.ஓசூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 110/11KV காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் ரூ.1 கோடியே 19 இலட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் புதிய 16MVA திறன் மின்மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தக்கோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிக்கொத்தூர், தீர்த்தம், பேடேப்பள்ளி, எர்ரன்டள்ளி, சின்னப்பள்ளி, மேடுப்பள்ளி, தியாகரசனப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நிலவிய குறைந்த மின்னழுத்தம் மற்றும் அதிக மின்பளு நிவர்த்தி செய்யப்பட்டு விவசாய பெருமக்கள் மற்றும் இதர பொதுமக்கள் சுமார் 9,000 பயனாளிகளுக்கு சீரான தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.மேலும், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 110/11KV ஜூஜூவாடி துணை மின் நிலையத்தில் ரூ.17 கோடியே 25 இலட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் புதிய 16MVA திறன் மின்மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜூஜூவாடி, மூக்கடைப்பள்ளி, பேகேப்பள்ளி, பேடரஹள்ளி, சின்னஎலத்தகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, எழில்நகர், காமராஜ்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நிலவிய குறைந்த மின்னழுத்தம் மற்றும் அதிக மின்பளு நிவர்த்தி செய்யப்பட்டு விவசாய பெருமக்கள் மற்றும் இதர பொதுமக்கள் சுமார் 9,000 பயனாளிகளுக்கு சீரான தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.ஓசூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 110/33-11KV பாகலூர் துணை மின் நிலையத்தில் ரூ.1 கோடியே 53 இலட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் 16MVA -ல் இருந்து 25 MVA -ஆக மின்மாற்றியின் திறன் உயர்த்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகலூர், ஜீமங்களம், உளியாளம், நள்ளூர், பௌத்தூர், அலசப்பள்ளி, முத்தாளி, வாணமங்களம், கொத்தப்பள்ளி, சூடாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நிலவிய குறைந்த மின்னழுத்தம் மற்றும் அதிக மின்பளு நிவர்த்தி செய்யப்பட்டு விவசாய பெருமக்கள் மற்றும் இதர பொதுமக்கள் என சுமார் 9,000 பயனாளிகளுக்கு சீரான தடையில்லா மின்சாரம்வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தலைமை பொறியாளர் (வேலூர் மண்டலம்) திருமதி. ஞான பெட்ஷிபா, மேற்பார்வை பொறியாளர் திருமதி.ஏஞ்சலா சகாயமேரி, செயற்பொறியாளர்கள் திரு.பழனி, திரு.பவுன்ராஜ், உதவி செயற்பொறியாளர் திரு.பழனிவேல், உதவி பொறியாளர்கள் திருமதி.விஜயபாபு, திருமதி.அம்சவேணி, திருமதி.சரண்யா, திரு.நித்யா, திரு.ஆசைத்தம்பி, காவேரிப்பட்டிணம் பேரூராட்சி தலைவர் திருமதி. அம்சவேணி, ஊராட்சி மன்ற தலைவர் திரு.எஸ்.மகேஸ். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!