Home » வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்த 13 -வது முறையாக 100 சதவிகிதம் தேர்ச்சி, ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பாராட்டு.

வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்த 13 -வது முறையாக 100 சதவிகிதம் தேர்ச்சி, ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பாராட்டு.

by Poovizhi R
0 comment

வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்த 13 -வது முறையாக 100 சதவிகிதம் தேர்ச்சி, ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பாராட்டு.. . . . . . . கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வெண்ணம் பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி யில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் நடந்து முடிந்த 10ம் வகுப்பு (எஸ். எஸ். எல். சி )அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சிப் பெற்று பள்ளிக்கு பெருமைத் தேடி தந்துள்ளனர்.கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெற உறுத்துணையாக செயல்படும் ஆசியர்களுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் முன்னால் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும்மான பி.சேகர் தலைமையில் பாரட்டு விழா நடைப்பெற்றது,இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பர்கூர் ஒன்றிய தி. மு. க செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவரூமான வி.ஜி.இராஜேந்திரன் கலந்துக்கொண்டு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சவிதம் தேர்ச்சிப் பெறக்காரணமாக இருந்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளைப் பாராட்டி பொன்னாடைகளைப் போர்த்தி இனிப்பு மற்றும் ஹீரோ பேனாக்களை வழங்கி வாழ்த்தினார்.இதனைத்தொடர்ந்து பர்கூர் ஒன்றியத்தில் 100 சதவிதம் தேர்ச்சிப் பெற்றுள்ளமாணவ, மாணவிகள் மட்டுமின்றி பள்ளியின் ஆசிரியர்களின் இந்த சிறப்புமிக்கப்பணியினை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும்,மாவட்ட திமுக செயலாளருமான டி.மதியழகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி ஆகியோர் தங்களது வாழ்த்தினை பள்ளிக்கு தெரிவித்து உள்ளனர்.மேலும் இந்த விழாவின்போது கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் ரவி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் திம்மி, முன்னாள் கௌரவ தலைவர் எம். கிருஷ்ணமூர்த்தி பள்ளியின் தலைமை ஆசிரியர் நேசப்பிரபா, மற்றும் ஆசிரியர்கள் சகாய ஆரோக்கியராஜ் , சதீஷ், அமலா ஆரோக்கியமேரி,முனிராஜ், சிவகுமார். உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!