Home » மை தருமபுரி அமைப்பு மற்றும் FUVISION FELT இணைந்து பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி செல்லவிருக்கும் மாணவர்களுக்கான “என் எதிர்காலம்” இலவச பயிற்சி பட்டறை நிகழ்ச்சி

மை தருமபுரி அமைப்பு மற்றும் FUVISION FELT இணைந்து பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி செல்லவிருக்கும் மாணவர்களுக்கான “என் எதிர்காலம்” இலவச பயிற்சி பட்டறை நிகழ்ச்சி

by Poovizhi R
0 comment

மை தருமபுரி அமைப்பு மற்றும் FUVISION FELT இணைந்து பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி செல்லவிருக்கும் மாணவர்களுக்கான என் எதிர்காலம் இலவச பயிற்சி பட்டறை நிகழ்ச்சி டான் சிக்சாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முதல் முதலில் கல்லூரி செல்லும் மாணவர்களின் மனநிலை, தன்னம்பிக்கை, மனிதநேயம், நேர்மறை வாழ்க்கை பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்கப்பட்டது. முப்பது மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கைக்கான நெறிமுறைகளை நன்கு கற்றறிந்தனர். மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர்.செந்தில், முனைவர்.கோவிந்த் மருதம் நெல்லி கல்வி குழுமம்,திரு.CKM மாதேஷ்,திரு.C.K.கணேஷ்,PSB திரு.B.சுரேஷ் குமார்,திரு.பசுமை சங்கர்,திரு.நற்சுவை சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான பயிற்சியை சேலம் மருத்துவர் திருவருட்செல்வன், உதயகுமார் சின்னசாமி, பசல் ரஹ்மான், மை தருமபுரி சதீஸ் குமார் ராஜா, ஆனந்த் மாரியப்பன், ஸ்ரீதரன், சபா தன்சீம் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக இருந்த டான் கல்வி குழுமத்தின் செயலாளர் சவீதா உதயகுமார் அவர்களுக்கு மை தருமபுரி குடும்பத்தினர் சமூக சேவகர் தமிழ்செல்வன், அருணாசலம், சந்திரசேகர், ஜனனி சத்தியநாதன், விஜயகாந்த் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!