Home » ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முதல் மேலும் பல புதிய அதி நவீன மருத்துவ சேவைகள்!மு.தம்பிதுரை எம்பி தொடங்கி வைத்தார்

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முதல் மேலும் பல புதிய அதி நவீன மருத்துவ சேவைகள்!மு.தம்பிதுரை எம்பி தொடங்கி வைத்தார்

by Poovizhi R
0 comment

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அதி நவீன வசதி பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அதிநவீன மருத்துவ சேவைகளை பயன்டுத்திக்கொள்ள வேண்டும் ஓசூர், ஓசூரில் அதியமான் பொறியியல் கல்லூரி அருகே செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில், நேற்று ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கேத்லாப், அதிநவீன என்.ஐசியு , பிஐ சி யு ஆகியவற்றின் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிறுவனரும், தலைவருமான தம்பிதுரை எம்.பி. தலைமை தாங்கி, ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கேத்லாப் மற்றும் அதிநவீன பிரிவுகளை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். முன்னதாக அவர் விழாவில் பேசியதாவது,ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது, கடந்த 5 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மற்றும் அண்டை மாவட்ட மக்களுக்கு லாப நோக்கமின்றி, அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் வழங்கி வருகிறது. மருத்துவமனையில் மேலும் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மாரடைப்பு நோய்களிலிருந்து உயிர் காக்கும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கும் அதிநவீன கேத்லாப்வசதி, குழந்தைகள் மற்றும் பச்சிளங் குழந்தைகள், குறைமாத குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்க அதிநவீன என் ஐசியு மற்றும் பிஜ சிறு வசதிகள் இந்த மருத்துவமனையில் இன்று தொடங்கப் பட்டுள்ளது.இந்த வசதிகள் மூலம் குழந்தைகளுக்கான அதிதீவிர நோய்களை, செயின்ட் பீட்டர்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலேயே சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியும். இவ்வாறு, விழாவில் தம்பிதுரை பேசினார். மருத்துவக் கல்லூரியின் செயலாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை பேசுகையில், “செயின்ட் பீட்டர்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அதி நவீன வசதி பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அதிநவீன மருத்துவ சேவைகளை பயன்டுத்திக்கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் விழாவில் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக, மருத்துவமனை தலைவர் பானுமதி தம்பிதுரை கலந்து கொண்டார். மருத்துவமனையின் செயலாளர் லாசியா தம்பிதுரை, நிர்வாக அறங்காவலர் நம்ரதா தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், மருத்துவ இயக்குனர் ராஜா முத்தையா வரவேற்றார். மேலும், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், முன்னாள் சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, மருத்துவ சூப்பிரண்டு வாசுதேவா, மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மருத்துவ கல்லூரி டீன் சோமசேகர் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!