Home » மாரண்டஅள்ளி கணபதி நகரில் குடியிருந்த வீட்டை இடிக்க வந்த மாரண்டஹள்ளி பேரூராட்சி தலைவர் – பாஜக நிர்வாகி கதறல்..

மாரண்டஅள்ளி கணபதி நகரில் குடியிருந்த வீட்டை இடிக்க வந்த மாரண்டஹள்ளி பேரூராட்சி தலைவர் – பாஜக நிர்வாகி கதறல்..

by Poovizhi R
0 comment

மாரண்டஅள்ளி கணபதி நகரில் குடியிருந்த வீட்டை இடிக்க வந்த பேரூராட்சி தலைவர் – பாஜக நிர்வாகி கதறல்..தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கணபதி நகரில் குடியிருந்து வருபவர் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் குணா,இவர் தனது சொந்த நிலத்தில் புதியதாக 4 ஏக்கரில் குடியிப்பு லே அவுட் அமைத்து அதற்கு அங்கீகாரம் பெற பூங்கா அமைக்க பேரூராட்சி நிர்வாகத்திற்க்கு ஒரு பகுதி நிலத்தை ஒதுக்கி தந்துள்ளார்,பூங்காவிற்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தையொட்டி வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.லே-அவுட்டிற்க்கு அங்கீகாரம் தருவதாக நிலத்தை பெற்றுக் கொண்ட பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்தது,இதனை தட்டி கேட்ட குணா மீது காழ்புணர்ச்சி கொண்ட பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக் கணி ஆகியோர் போலீசாரின் உடந்தையுடன் காலை பொக்லைன் எந்திரத்துடன் சென்று வீட்டை இடிக்க சென்றனர்.இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த குணா இது சம்மந்தமாக கோர்ட்டில் வழக்கு இருப்பதாகவும் வழக்கு முடியும் வரை அவகாசம் வேண்டும் என கோரியிருந்தார்.இது சம்மந்தமாக போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த அதே வேளையில் சற்றும் எதிர்பாராத விதமாக பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக் கணி மற்றும் தலைவர் வெங்கடேசன் ஆகியோரின் கண் அசைவில் பொக்லைன் எந்திரம் மூலம் வீட்டின் ஒரு பகுதியை இடித்து தள்ளினர்.இதனை கண்டு குணா மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் வடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக ஓடினர்.இதனால் அதிகாரிகள் மீதி வீட்டை இடிக்காமல் திரும்பி சென்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!