Home » கிருஷ்ணகிரி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது

கிருஷ்ணகிரி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான பதிவு 20.05.2023 முதல் நடைபெற்று வருகிறது. முதலாம் ஆண்டிற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Online (https://www.tnpoly.in) விண்ணப்பிக்கலாம் மற்றும் கல்லூரிக்கு நேரில் வந்தும் விண்ணப்பிக்க 09.06.2023 வரை மூலம் கடைசி நாளாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை மாணவ/மாணவியர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அவர்கள் தகவல்.மேலும், பதிவு கட்டணம் : ரூ.150/-ஐ விண்ணப்பதாரர் Debit card/ Credit card / Net banking இணையதள வாயிலாக செலுத்தலாம். SC/ST பிரிவினர் பதிவு கட்டணம் செலுத்த அவசியமில்லை.எனவே, இக்கல்லூரியின் ஆண்டு கட்டணம் ரூ.2352/- மட்டுமே. இயந்திரவியல் துறை (Mechanical), அமைப்பியல் துறை (Civil), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை .(Electronics and Communication ) மற்றும் கணினித் துறை (Computer) ஆகிய துறைகள்உள்ளன என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.கல்லூரியின் சிறப்பம்சங்கள்:1) இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.2) அரசு கல்வி உதவித் தொகை3) இலவச பஸ் பாஸ்4)இரண்டாமாண்டு Merit மாணவர்களுக்கு அரசின் உதவித் தொகையுடன் கூடிய முன்னணி நிறவனங்களில் Internship Training.5) AICTE -இன் மூலம் பிரகதி உதவித்தொகை மெரிட் மாணவிகளுக்கு ரூ.50,000/-மற்றும்மாற்று திறனாளிகளுக்கு ரூ.50,000/- மத்திய அரசின் மூலம் வழங்கப்படும். 6) மூவலூர் இராமாமிர்தம் அம்மையர் உயர்கல்வி புதுமை பெண் உறுதி திட்டம் மூலம்அரசுபள்ளிகளில் பயின்ற மாணவியர்களுக்கு மாதம் ரூ 1000/- பெற்று தரப்படும். 7) இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வளாக நேர்காணல் மூலம் 100% வேலை வாய்ப்பு ஏற்படுத்திதரப்பட்டு வருகிறது.8) Short Term Courses through CIICPதொடர்புக்கு: 9791278421, 8838736839, 7010945671, 9788633004, 9952489993, 9487243178,9171846685, 8248330130

You may also like

Leave a Comment

error: Content is protected !!