Home » ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது

ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது

by Poovizhi R
0 comment

ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (24.05.2023) நடைபெற்றது.மழைகாலம் துவங்கும் முன் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரசு வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (24.05.2023) நடைபெற்றது.2021-2022ஆம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், நமக்கு நாமே திட்டம், சமூக பொருளாதார மேம்பாட்டுத்திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பழங்குடியினர் நலத்திட்டம் (தெரு விளக்கு, குடிநீர் பணிகள்), பிரதான் மந்திரி ஆதர்ஸ் கிராம் யோஜனா திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம், தன்னிறைவு திட்டம், தேசிய கிராம சுயாட்சி திட்டம், சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா, குளங்கள் மற்றும் ஏரிகள் தூர் வாருதல், ரூர்பன் மிஷன், பள்ளி சமையலறை கட்டுதல், தூய்மை பாரத இயக்கம், கிராம சாலைகள் மற்றும் பாலங்கள், குடிநீர் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளான சாலை அமைக்கும் பணிகள், சிறு பாலங்கள் கட்டுமான பணிகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணிகள், குடிநீர் திட்ட பணிகள் போன்ற பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். மேலும், புதிய திட்ட பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும். மேலும் மழைகாலம் துவங்கும் முன் சாலை பணிகள், குடிநீர் திட்டபணிகள் உள்ளிட்ட அத்தியாவசியமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி,வந்தனா கார்க் இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.பசுபதி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!