Home » பெத்ததாளப்பள்ளி மண்டு மாரியம்மன் விழாவினை சிறப்பாக நடத்திய 32 ஊர்கவுண்டர்களைப் பாராட்டி தமிழ்நாடு ஜல்லிகட்டு பயிற்சி மையத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

பெத்ததாளப்பள்ளி மண்டு மாரியம்மன் விழாவினை சிறப்பாக நடத்திய 32 ஊர்கவுண்டர்களைப் பாராட்டி தமிழ்நாடு ஜல்லிகட்டு பயிற்சி மையத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

by Poovizhi R
0 comment

பெத்ததாளப்பள்ளி மண்டு மாரியம்மன் விழாவினை சிறப்பாக நடத்திய 32 ஊர்கவுண்டர்களைப் பாராட்டி தமிழ்நாடு ஜல்லிகட்டு பயிற்சி மையத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.கிருஷ்ணகிரி அருகே உள்ளபெத்த தாளப்பள்ளி கிராமத்தில் எழுந்திருள்ளமண்டு மாரியம்மன் திருக்கோயில் கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு 32 கிராமங்கள் ஒன்றுணைந்து நடத்திய மாபெரும் மாரியம்மன் திருவிழா வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது.இந்த திருவிழாவின்போது அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முளைப்பாரி எடுத்தல், பெங்கலிடுதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது.இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக மாடு விடும் திருவிழா நடைப்பெற்றது.இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகளுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூஜைகள் செய்யப்பட்டது பின்னால் நாடுகளை கௌரவிக்கும் வகையில் கோவிலை சுற்றி எருதாட்டம் நடத்தப்பட்டது.கடந்த ஒரு வாரங்களாக ஸ்ரீமண்டு மாரியம்மன் திருவிழாவினை சிறப்பாக நடத்தி முடித்த 32 கிராம ஊர்க்கவுண்டர்களைசிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது,இந்த நினைவு பரிசுகளை முன்னாள் ராணுவத்தை சேர்ந்த கார்கில் பெருமாள், கேப்டன் ரமணா மற்றும் முன்னால் ராணுவ வீரர்களான அசோகன், ஆறுமுகம்,மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஊர்கவுண்டர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கிப்பாராட்டினார்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!