Home » தர்மபுரியில் ஈசாப் வங்கி துவக்கம் வங்கியை தர்மபுரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் அவர்கள் துவக்கி வைத்தார்

தர்மபுரியில் ஈசாப் வங்கி துவக்கம் வங்கியை தர்மபுரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் அவர்கள் துவக்கி வைத்தார்

by Poovizhi R
0 comment

தர்மபுரியில் ஈசாப் வங்கி துவக்கம் வங்கியை தர்மபுரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் அவர்கள் துவக்கி வைத்தார் தர்மபுரி பச்சமுத்து மேல்நிலைப் பள்ளி அருகில் கேரள மாநிலம், திருச்சூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஈசாப் வங்கியின் புதிய கிளையை 26.05.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் தர்மபுரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தங்கம் மருத்துவமனை தலைவர் திரு. டாக்டர் செந்தில் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார் அப்பொழுது அவர் பேசுகையில் தர்மபுரி பஸ் நிலையத்தில் உள்ள சிறிய வணிகரிடம் ஒரு நாட்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து 100 ரூபாய் வட்டி வாங்குகின்ற சூழ்நிலை தற்பொழுது நிலவி வருகிறது இதனால் கோடி கணக்கில் வட்டியாக கட்டுகின்ற சூழல் சிறு வணிகர்களுக்கு ஏற்படுகிறது மற்றும் தர்மபுரி மாவட்டம் கந்துவட்டியால் பின்னுக்கு தள்ளப்பட்டது இந்த சூழ்நிலை மாற வேண்டும் என்றால் இது போன்ற வங்கிகள் மூலமாகவும் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் தர்மபுரி மாவட்டம் வளர்ந்த மாவட்டமாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார் முன்னதாக. மருத்துவர் செந்தில், மலரும் உள்ளாட்சித் தலைவர் திரு முருகேசன், கிரஸ்ட் இந்தியா இயக்குனர் தேவகி, இந்தியன் பில்லர்ஸ் வினோத், ஆகியோர் குத்து விளக்கேற்றி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஈசாப் வங்கியின் தமிழ்நாடு தலைவர் திரு அருண் அவர்கள் பேசும்போது இந்தியா முழுவதும் 27 மாநிலங்களில் 700 க்கும் மேற்பட்ட கிளைகளை துவக்கி அடித்தட்டு மக்களுக்கு உதவி செய்வதற்காகவும்,விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஈசாப் வங்கி பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்றும் பேசினார். வங்கியின் காசாளர் அறையை கமலம் மருத்துவமனை மருத்துவ அலுவலர் வசந்த ராஜ், ஜெயம் தொண்டு நிறுவன தலைவர் கென்னடி, ஆர் ஆர் சி தொண்டு நிறுவன தலைவர் ராமசாமி ஆகியோர் திறந்து வைத்தார்கள். கூட்டுப் பொறுப்புக் குழுக்களுக்கு கடன் வழங்கும் அலுவலகத்தை தீபம் தொண்டு நிறுவன தலைவர் கற்பகவல்லி, விஐபி தொண்டு நிறுவன தலைவர் தலைவர் சரளா ஆகியோர் திறந்து வைத்தார்கள். பாதுகாப்பு பெட்டக அறையை டி பி டி சி தொண்டு நிறுவன தலைவர் திருமதி காசிமணி, சேவா தொண்டு நிறுவன தலைவர் திரு துரைமணி,BSVD தொண்டு நிறுவன தலைவர் ரங்கநாயகி, விப்ரோ தொண்டு நிறுவன தலைவர் திரு. வெங்கடேசன் ஆகியோர் திறந்து வைத்தார்கள். ஈசாப் வங்கியின் ATM. யை மாற்றுத்திறனாளியும்,பசியில்லா தர்மபுரி நிறுவனத் தலைவர் திரு. வினோத் குமார் துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாய பிரிவு தலைவர் திரு சுரேந்தர் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் விவசாய கடனுக்கு மூணு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் எனவும், விவசாய பெருமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் வங்கியின் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய வங்கிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் . முன்னதாக சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் திரு சரவணன் அவர்கள் வரவேற்றார், தர்மபுரி வங்கி கிளை மேலாளர் திரு பிரசாந்த் அவர்கள் நன்றி கூறினார்…

You may also like

Leave a Comment

error: Content is protected !!