Home » கோவிட்-19 பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியவருக்கு 25% மானியத்துடன்தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

கோவிட்-19 பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியவருக்கு 25% மானியத்துடன்தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

by Poovizhi R
0 comment

கோவிட்-19 பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியவருக்கு 25% மானியத்துடன்தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தகவல் .இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப அவர்கள் தெரிவித்துள்ளதாவது.கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு “புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்” (MEGP) என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம். அவர்கள் கோவிட்-19 பெருந்தொற்று பரவலினால் 01.01.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பி இருக்க வேண்டும். குறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 க்கு மேலாகவும் 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும். வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5.00 இலட்சம் ஆகவும் உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு ரூ.15.00 இலட்சம் திட்ட மதிப்பீடாக இருக்க வேண்டும். பயனாளர் தம் பங்காக பொது பிரிவு பயனாளர்கள் எனில் திட்ட தொகையில் 10% மற்றும் பெண்கள். இடஒதுக்கீட்டு பிரிவினர் உள்ளட்ட சிறப்பு பிரிவினர் எனில் 5% செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும்.அரசு, திட்டத் தொகையில் 25% அதிகபட்சம் ரூ.2.5 இலட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிகட்டப்படும். கடன் வழங்கப்பட்ட 6 மாதங்கள் கழித்து 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்தப்பட வேண்டும்.இத்திட்டம், மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmoonline.tn.gov.in/meqpஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பத்தினை இரு நகல்களாக சமர்பிக்க வேண்டும்.எனவே, இந்த வாய்ப்பினை வெளிநாடுகளிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தருமபுரிமாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும், தொழில் துவங்க ஆர்வமும் கொண்டோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், SIDCO தொழிற்பேட்டை ஓட்டப்பட்டி, தருமபுரி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 8925533940, 8925533941 மற்றும் 8925533942 ஆகியஎண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!