Home » ஓசூரில் 11-வது புத்தக கண்காட்சி துவக்கம்

ஓசூரில் 11-வது புத்தக கண்காட்சி துவக்கம்

by Admin
0 comment

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாட்டில் 12 நாட்கள் புத்தக கண்காட்சி நடக்க உள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, ஓட்டல் ஹீல்ஸ் வளாகத்தில் 11-வது புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிராகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் திரு.எஸ்.ஏ.சத்யா, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் இன்று(8.7.2022) துவக்கி வைத்து புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.

மாணவ மாணவியர்கள், இளைஞர்களை நல்வழி படுத்தவும், வாசிக்கும் திறனை ஊக்குவிக்கவும் இந்த புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, ஒட்டல் ஹீல்ஸ் வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் 11-வது புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப, அவர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிராகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் திரு.எஸ்.ஏ.சத்யா, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் இன்று(8.7.2022) துவக்கி வைத்து புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழக அரசு 37 மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்த உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் ஓசூர் ஓட்டல் ஹீல்எப் வளாகத்தில் இன்று 8.7.2022 முதல் 19.7.2022 வரை 12 நாட்கள் புத்தக கண்காட்சி நடக்க உள்ளது. இக்கண்காட்சியில் மொத்தம் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1 இலட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. நாள் தோறும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசின் மூலம் நடத்த படவுள்ள முதல் புத்தக கண்காட்சி இதுவாகும். இந்த புத்தக கண்காட்சி மூலம் மாணவ மாணவியர்கள் நேரடியாக தங்களுக்கு தேவையான புத்தகங்களை பெற்று தங்கள் அறிவு திறனை மேம்படுத்திக்கொள்ளலாம். அந்த காலகட்டத்தில் தங்களுக்கு தேவையான புத்தகங்கள் தேவைப்படும் ஒரு புத்தகம் வாங்கி படிக்க பல கிலோ மீட்டர் தூரம் சென்று புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டிய நிலை இருந்ததது. ஆனால் இந்த காலகட்டத்தில் உங்களை தேடி புத்தகங்கள் இந்த புத்தக கண்காட்சி மூலம் கிடைகிறது.

அதேபோல இந்த காலகட்டத்தில் கணினி, மொபைல் போன் மூலம் இந்த உலகத்திலுள்ள அனைத்து விஷயங்களை தெரிந்துக்கொள்ளலாம். ஆனால் கணினி மற்றும் மொபைல் போன் மூலம் படிக்கும் போது கிடைக்கும் அறிவு திறனை விட, நேரடியாக புத்தகம் வாங்கி படிக்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. இங்கு வருகை புரிந்துள்ள மாணவ மாணவியர் தங்கள் பெற்றோர்களுடன் புத்தகம் வாங்கி படிப்பது தொடர்பாக கலந்து ஆலோசித்து இங்கு புத்தகங்களை வாங்கி படித்து உங்கள் அறிவு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் புத்தக வாசிப்பவர்களாகவும், புத்தக வாசிப்பின் மூலம் தலை சிறந்தவர்களாக உருவாக்குவதே இந்த புத்தக கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். மேலும், கடந்த கோவிட் -19 காலகட்டத்திலும் புத்தக கண்காட்சியை தொடர்ந்து நடத்தியத்தற்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நாடு, ஒரு மாநிலம், ஒரு சமுதாயம் எவ்வாறு அமையும் என்பது ஒவ்வொரு குடிமகனும் கணினி, விஞ்ஞானம் மற்றும் அறிவியல் திறனில் எவ்வாறு இருகிறார்கள் என்பதை வைத்து முடிவு செய்யலாம். எனவே, பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த புத்தக கண்காட்சியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி,தேன்மொழி, ஒசூர் மாநகராட்சி துணை மேயர் திரு.சி.ஆனந்தையா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.கு.பாலசுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.பி.மகேஸ்வரி, மாவட்ட நூலக அலுவலர் திருமதி.ம.தனலட்சுமி, ஓசூர் வட்டாட்சியர் திரு.கவாஸ்கர், ஓசூர் அரசு கலை கல்லூரி முதலவர் திரு.சு.ஸ்ரீரிதரன், புனித ஜோசப் கலை கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ஆரோக்கியராணி, புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் திரு.வணங்காமுடி, திரு.சிவகுமார், திரு.எஸ்.ஆர்.சேதுராமன், திரு.கோ.கண்மணி, திரு.அறம் கிருஷ்ணன், திரு.சத்தியமூர்த்தி, மற்றும் பி.எம்.சி டெக் நிறுவன தலைவர் திரு.குமார், மாமன்ற உறுப்பினர்கள் திரு.சசிதேவ், திரு.சென்னீரப்பா, திரு.ரவி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் திரு.சுகுமார், காவேரி மருத்துவமனை இணை இயக்குநர் திரு.விஜயபாஸ்கர், ஓட்டல் ஹீல்ஸ் தலைமை செயல் அலுவலர் திரு.அலகரசு, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். இறுதியாக பொறியாளர் திரு.ஜே.அரிசந்திரன் அவர்கள் நன்றி தெரிவித்தார்,

You may also like

Leave a Comment

error: Content is protected !!