Home » முதுகலை ஆசிரியர் தேர்வு வாரிய புதிய விதிமுறைகளை மாற்ற வேண்டி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு✍️✍️✍️✍️✍️✍️.

முதுகலை ஆசிரியர் தேர்வு வாரிய புதிய விதிமுறைகளை மாற்ற வேண்டி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு✍️✍️✍️✍️✍️✍️.

by Admin
0 comment

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.இந்த அறிவிப்பில் போட்டி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் முதுநிலைப் பட்டதாரிகளின் வயது வரம்பு 40 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான வேலையில்லா முதுகலைப் பட்டதாரிகள் பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.எனவே இதனை மாற்றி 59 வயது வரை உள்ள முதுகலை பட்டதாரிகள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் ஆசிரியர் தேர்வு வாரிய எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொண்டு தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பெற்றிருக்கக் கூடிய பணி அனுபவத்தின் அடிப்படையிலும், கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த ஆண்டுகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு அதற்குப் பிறகே ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரிய முடிவுகள் வெளியிடப்பட்டு ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது இரண்டு ஆசிரியர்களை தேர்வு செய்து இறுதியில் அதில் ஒருவரை ஆசிரியராகப் பணியமர்த்தும் புதிய நடைமுறையை நீக்கி , தேர்வு செய்யும் ஒரு ஆசிரியரையே பணியமர்த்தும் பழைய நடைமுறையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்ஆ.இராமு மாநிலத் தலைவர் நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்7373761517

கிருஷ்ணகிரி ஒருங்கிணைப்பாளர் திரு.ஆ.சி.சிவக்குமார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!