Home » கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் திமுக அமைதி பேரணி

கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் திமுக அமைதி பேரணி

by Admin
0 comment

கலைஞரின் 4-ஆம் ஆண்டு நினைவு நாள்

கிருஷ்ணகிரி நகர திமுக

கிருஷ்ணகிரியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காவது நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகரில் தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய பழைய குடியிருப்பில் இருந்து தொடங்கிய பேரணிக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.கே. நவாப் தலைமை வகித்தார். புறநகர் பேருந்து நிலையத்தை அடுத்து உள்ள அண்ணா சிலை அருகே இந்த ஊர்வலம் நிறைவு பெற்றது. அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் டி. செங்குட்டுவன், மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், நகரமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திமுக நகர இளைஞரணி

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி திமுக சார்பாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் தலைமையில் கலைஞரின் திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சூளகிரி தெற்கு ஒன்றிய திமுக

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சூளகிரி தெற்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர் கே.சி.பாக்யராஜ் தலைமையில் சூளகிரியில் கலைஞரின் திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை சேர்மென் ஷேக்ரசீத், முன்னாள் சேர்மென் அருணா பூசன்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், வீராரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

ராயக்கோட்டை

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட கழகச் செயலாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஒய் பிரகாஷ் எம்எல்ஏ அவர்களின் ஆணைப்படி கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி. எம்.சின்னராஜ் தலைமையில் ராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட துணை அமைப்பாளர்களான எம்.பி.பெரியசாமி மற்றும் வி.சி.குமரேசன், ஆர்.சந்திரன் மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் டி.எம். அரியப்பன், எம் கணேசன் ஒன்றிய அவைத்தலைவர் எல் ஆர் ஜெயராமன் மற்றும் முன்னாள் நகர செயலாளர் கே என் நாகராஜ் ஒன்றிய துணை செயலாளர்கள் திருமுருகன், குணசேகரன் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் சிவகுமார், ரஜினி, முரளி ஒன்றிய பொருளாளர் முருகன் முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சண்முகம், மாரிமுத்து மற்றும் ஒன்றிய மீனவரணி அமைப்பாளர் கணேசன் மற்றும் ஆத்மா திட்டத்தின் இயக்குனர்கள் மாதேஷ் , கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராயக்கோட்டை கிளை நிர்வாகிகள் கிருஷ்ணன் கி. கோபால், நந்தகுமார், ஐய்யப்பன், மஞ்சூ, எஸ் டி டி கிருஷ்ணன் மற்றும் பழையூர் மூர்த்தி மற்றும் கொப்பக்கரை கிளை நிர்வாகிகள் பழனி புலி என்கிற கோவிந்தராஜ் மற்றும் முனிராஜ் பால் கிருஷ்ணன் மற்றும் வெப்பாலம் பட்டி நஞ்சுண்டன் உள்ளட்டி கிளை நிர்வாகிகள் முனிராஜ் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், பாசில் மற்றும் குருபரப்பள்ளி கிளை செயலாளர் ஜெயப்பன் நாக துணை முனிராஜ் உள்ளுறுக்கை கிளை நிர்வாகிகள் மேஸ்திரி ராஜா மற்றும் அஸ்லாம் பாய் மற்றும் சஞ்சலப்பட்டி கோவிந்தராஜ் பால்லாம்பட்டி முனிராஜ் மற்றும் 10 ஊராட்சிகளின் கழக உடன்பிறப்புகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளரும் வேப்பனபள்ளியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.முருகன் கலைஞரின் திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய செயலாளர் ரகுநாத் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட அணிகளின் அமைப்பார்கள் துணை அமைப்பாளர்கள். ஒன்றிய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு தலைவருடைய திருவுரவ படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினர்.

பாப்பாரப்பட்டி,தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுக கட்சினர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு . கருணாநிதிக்கு 4.ம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு நடைபெற்றது. இதில் பாப்பாரப்பட்டி நகர செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அவை தலைவர் விஜய் ஆனந். பொருளாளர் தர்மலிங்கம். மாவட்ட பிரதிநிதி திருவேங்கடம். குமரன் ஆகியோர் மறைந்த கருணாநிதி அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மத்தூரில் வடக்கு ஒன்றியம் 

மத்தூரில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 4 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவரது திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து ஒன்றிய செயலாளர்கள் குண.வசந்தராசு, கே.ஆர்.கே.நரசிம்மன் ஆகியோர் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்

மாரண்டஅள்ளி பேரூர் கழகம்

மாரண்டஅள்ளி பேரூர் கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதி அவர்களின் 4 -ஆம்  ஆண்டு நினைவஞ்சலியோட்டி மாரண்டள்ளியில் உள்ள 15 வார்டு கிளைக் கழகங்களிலும் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு மாரண்டஅள்ளி முக்கிய வீதிகளின் வழியாக பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையிலும், பேரூர் கழகச் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான வெங்கடேசன் முன்னிலையிலும் அமைதிப் பேரணி நடைபெற்றது. முதலில் இபி காலனியில் தொடங்கிய ஊர்வலமானது 4 -ரோடு வழியாக பேருந்து நிலையம் மற்றும் பைபாஸ் ரோடு -மெயின் ரோடு வழியாக தேதி பேரணி நடைபெற்றது இந்த அமைதி பேரணையின் போது நூற்றுக்கணக்கான கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம் ,பேரூராட்சி கவுன்சிலர்கள் கீதா வடிவேல், லட்சுமி முனிராஜ்,யதிந்தர், கார்த்திகேயன் ரீனா வேலு, அபிராமி காந்தி, சத்யா சிவகுமார், வெங்கடேசன், வசந்தி ரமேஷ், அவைத்தலைவர் செங்கல் மணி, துணைத் தலைவர் மாதையன், பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் பன்னீர் செல்வம், சுரேஷ், சாமனூர் ஊர் கவுண்டர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் ராஜா, மாணவரணி மணிவண்ணன், வழக்கறிஞர் வடிவேல்,பஞ்சப்பள்ளி சாதப்பன், ஜானி,மாது, சிவக்குமார் மல்லாபுரம் கோவிந்தசாமி,  இளைஞரணி செந்தில்,தளபதி மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், 15 வார்டு கிளைச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு பேரூர் கழக திமுக

பாலக்கோடு பேரூர் கழக திமுக சார்பில் பேரூர் கழகச் செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பேரூராட்சி தலைவர் முரளி அவர்கள் தலைமையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை பாலக்கோட்டில் உள்ள 18 வார்டு கிளைகளிலும் அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பாலக்கோடு முக்கிய வீதிகளின் வழியாக அமைதிப் பேரணி நடைபெற்றது.முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாலக்கோடு பேரூர் கழக திமுக சார்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியானது பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தொடங்கி பாலக்கோடு ஓசூர் சாலையில் வழியாக மகாத்மா காந்தி சாலை வரை நடந்த அமைதிப் பேரணியில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை வழக்கறிஞர் முருகன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் தீபாமுருகன்,ஓன்றிய கவுன்சிலர்கள்,அழகுசிங்கம்,ராஜாமணி,முத்துசாமி,ஊராட்சி மன்ற தலைவர்,ஆனந்தன்,முன்னாள் ஒன்றிய குழு து.தலைவர் நாகராஜ்,வழக்கறிஞர் இளவரசன்,கிரஷர் முனியப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஆனந்தன், இளைஞர் அணி இதாயத்துல்லா, மற்றும் பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கெலமங்கலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழர் கலைஞர் அவர்கள் நினைவு நாள் மௌன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது கலைஞர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்றவர்கெலமங்கலம் நகரச் செயலாளர் தஸ்திகீர் முன்னிலை வகித்தவர் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ் உமா சுரேஷ் நகர துணை செயலாளர்கள் ஹரி ரேகா (எ)ஆஷாபி சுரேஷ் நகர பொருளாளர் ஆனந்த்ஐயா ஒன்றிய பிரதிநிதி சான்பாஷா செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் கெலமங்கலம் ஒன்றிய 12 வது வார்டு கவுன்சிலர் மாரப்பா(எ) ராங்கப்பா திமுக கட்சி பிரதிநிதி சனாவுல்லா கோவிந்தராஜ் மற்றும் ரமேஷ் சாதிக் மற்றும் ஏராளமான திமுக கட்சி பிரதிநிதிகள் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் உடனிஇருந்தன

உத்தனப்பள்ளி

சூளகிரி தெற்கு ஒன்றியம் உத்தனப்பள்ளி கிராமத்தில் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு திரு .கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம் இதில் பி. வெங்கடேஷ் சூளகிரி தெற்கு முன்னாள ஒன்றிய செயலாளர் தலைமை தாங்கினார் மற்றும் கலக பிராமுகர் N.பாலசுப்பிரமணி ,கூட்டுறவு வங்கி தலைவர் சேகர்,k.m.ஆனந்த் மாவட்ட பிரதிநிதி ,பாபு கிளை கழக செயலாளர் ,வாசு கிளைக் கழகச் செயலாளர், கவுஸ் பாய் ,நஞ்சுண்டப்பா ,செந்தில் ,கோவிந்தப்பா PTA தலைவர் ,லட்சுமய்ய கவுடு ,விஜி ,ஆகியோர் கலந்து கொண்டனர்

ஊத்தங்கரை ஒன்றியத்தில், பல்வேறு இடங்களில் தி.மு.க., சார்பில், மறைந்த மாஜி.,முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு, நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர்கள் தெற்கு ரஜினி செல்வம்,மத்திய எக்கூர் செல்வம்,வடக்கு குமரேசன்,நகரசெயலாளர் பாபுசிவக்குமார் ஆகியோர் முன்னிலையில்,பீ.டீ.ஒ., ஆபீஸ் எதிரே, கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அங்கிருந்து பேருந்து நிலையம் வரை, அமைதி பேரணியாக வந்து, ஊத்தங்கரை ரவுன்டானாவில் உள்ள, பெரியார்,அண்ணா போன்ற திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.ரவுன்டானாவில் வைக்கப்பட்ட, கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், ஒன்றிய சேர்மேன் உஷாராணி,டவுன் பஞ்., தலைவர் அமானுல்லா,மாநில மகளிர் ஆனைய குழுஉறுப்பினர் மாலதி,மாஜி.,எம்.எல்.ஏ.,கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் நிர்மலா,கதிர்வேலு மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

மாரண்டஅள்ளி தருமபுரி மாவட்டம்

பாலக்கோடு மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூரில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி து.அமைப்பாளர் இராஜபார்ட் ரங்கதுரை அவர்கள் தலைமையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஹரி பிரசாத்,வாசு,இராஜேந்திரன், மற்றும் கிளை செயலாளர்கள்,பொதுமக்கள், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பஞ்சப்பள்ளி ஊராட்சி தருமபுரி மாவட்டம்

பாலக்கோடு வடக்கு ஒன்றியம், பஞ்சப்பள்ளி ஊராட்சி, பட்டாபி நகர் கிராமத்தில் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், பெரியார் கனவை நிறைவேற்றிய முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நான்காம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.இதில் பஞ்சப்பள்ளி முன்னாள் ஊராட்சி செயலாளர் பாண்டுரங்கன் அவர்கள் கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், இதில் ஜே.ஆர்.கிரைனட்ஸ் மேலாளர் சிங்காரவடிவேலன், பட்டாபி நகர் கிளை செயலாளர் இராஜகோபால், பஞ்சப்பள்ளி ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள்,சேகர், முனிரத்தினம், தொ.மு.ச.நிர்வாகிகள் மாரியப்பன், முனிராஜி, முன்னாள் ஒன்றிய பிரதிநிதி இராமச்சந்திரன் மற்றும் கிளை கழகம் முன்னோடிகள் .கருணாநிதி, கோ.சரவணன், தருமன், கமலநாதன், பாளையம் அருள் பிரகாஷ், ,கோவிந்நன், ,திம்மராஜி, ,அழகுசெட்டி, ,பெரியசாமி, மற்றும் ஏராளமான கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!