Home » பென்னாகரத்தில் புத்தகக் கண்காட்சி

பென்னாகரத்தில் புத்தகக் கண்காட்சி

by Admin
0 comment

பென்னாகரத்தில் புத்தகக் கண்காட்சி தகடூர் புத்தகப் பேரவை,பாரதி புத்தகாலயம் மற்றும்ப்யூவிஷன் கிளப் இணைந்து பென்னாகரத்தில் புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. எஸ். மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.இந்நிகழ்ச்சி சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்மா. பழனி தலைமையில் புத்தக கண்காட்சியை தகடூர் புத்தக பேரவை செயலாளர் மருத்துவர்முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செந்தில் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். வாசிப்பை நேசிக்கும் பழக்கத்தை ஒவ்வொருவரிடமும் உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் முறையாக பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.நூல்கள் வழியே மிக சிறந்த அனுபவத்தை பெற முடியும். நல்ல நூல்கள் மனித குலத்தை சீர்படுத்தும். தர்மபுரி மாவட்ட மக்கள் மிகச்சிறந்த அறிவு வெளிச்சத்தை பெறுவதற்கு இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும் என பேசினார்.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கோ. விஜயலட்சுமிமுதல் விற்பனையை தொடங்கி வைக்க அதனை வணிகர் சங்க செயலாளர்கார்த்திக் பெற்றுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்டமுதல்நிலை நூலகர் மாதேஸ்வரன், தகடூர்புத்தக பேரவைத் தலைவர்சிசுபாலன், ஆசிரியர்தங்கமணி, ப்யூவிஷன்கிளப் நிர்வாகிகள் பசல் ரஹ்மான், உதயக்குமார்சின்னசாமி, ஓய்வுபெற்றதலைமையாசிரியர் வீரமணி , ஆசிரியர் சரவணன், நூலகர் பூபதிஉட்பட எழுத்தாளர்கள் கவிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முடிவில் தேவகி நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!